தனுஷ் – கார்த்திக் சுப்புராஜ் இணையும் படத்தில் நடிக்கிறார் ஹாலிவுட் நடிகர் அல் பசினோ?

‘இறைவி’ படத்தை தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் புதிய படத்தில் தனுஷ் ஹீரோ நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தொடங்க உள்ளது. அதற்கான பணிகளில் கார்த்திக் சுப்புராஜ் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.

ரூ.50 கோடி பட்ஜெட்டில் ஹாலிவுட் தரத்தில் இப்படம் உருவாக இருக்கிறதாம். இப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் அமெரிக்காவில் படமாக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. ஹாலிவுட் தரத்தில் உருவாக இருப்பதால் இப்படத்தில் பிரபல ஹாலிவுட் நடிகர் ஒருவரையும் நடிக்க வைக்க படக்குழுவினர் முடிவு செய்துள்ளனராம்.

அதன்படி, ‘காட் பாதர்’, ‘சென்ட் ஆப் தி உமன்’ உள்ளிட்ட பல புகழ்பெற்ற ஹாலிவுட் படங்களில் நடித்த பிரபல நடிகர் அல் பசினோவிடம் தற்போது படக்குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. ‘சென்ட் ஆப் தி உமன்’ படத்திற்காக இவருக்கு ஆஸ்கர் விருது கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

தனுஷ் – கார்த்திக் சுப்புராஜ் இணையும் இப்படத்தை தனுஷ் ஒரு பிரபல நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்க உள்ளார்.

Read previous post:
0a3n
“முதல்வர் உடல்நலம் இவ்வாறிருக்க, என் பிறந்தநாள் விழாவை தவிர்க்கவும்”! – கமல்ஹாசன்

உடல்நலக் குறைவு காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஒரு மாதத்துக்கும் மேலாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், நடிகர் கமல்ஹாசன் தன்

Close