நீட் தேர்வில் தோல்வி: தமிழக மாணவிகள் 3 பேர் தற்கொலை

மருத்துவ படிப்பில் இந்த ஆண்டு சேருவதற்காக நடத்தப்பட்ட நீட் தேர்வின் முடிவுகள் நேற்று (புதன்கிழமை) வெளியிடப்பட்டன.

இந்த தேர்வில் தேர்ச்சி பெற இயலாமல் போனதால், திருப்பூரைச் சேர்ந்த மாணவி ரிதுஸ்ரீ தூக்குப்போட்டும்,, பட்டுக்கோட்டையைச் சேர்ந்த மாணவி வைஷ்யா மண்ணெண்ணையை ஊற்றி தீக்குளித்தும் நேற்று தற்கொலை செய்துகொண்டார்கள்.

இந்நிலையில், விழுப்புரம் மாவட்டம், மரக்காணத்தை அடுத்த கூனிமேடு கிராமத்தைச் சேர்ந்த மோனிஷா என்ற மாணவி இதே காரணத்துக்காக இன்று (வியாழக்கிழமை) தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

நீட் தேர்வு காரணமாக தமிழகத்தில் இரண்டு நாட்களில் 3 மாணவிகள் தற்கொலை செய்து கொண்டுள்ள நிலையில், நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்குமாறு ஒன்றிய பாஜக அரசை மாநில அதிமுக அரசு வற்புறுத்த வேண்டும் என்று எதிர்கட்சித் தலைவர்களும், கல்வியாளர்களும் வலியுறுத்தியுள்ளார்கள்.

Read previous post:
0a1a
7 – விமர்சனம்

ஹவிஷும் நந்திதாவும் ஒரு ஐடி நிறுவனத்தில் பணிபுரியும்போது காதலர்கள் ஆகிறார்கள். இருவரும் ரகசிய திருமணம் செய்துகொள்கிறார்கள். இந்த சூழ்நிலையில் திடீர் என்று ஹவிஷ் காணாமல் போகிறார். ரகுமான்

Close