முகிலன் மாயமான வழக்கில் துப்பு துலங்கியது: உயர் நீதிமன்றத்தில் போலீஸ் தகவல்

சமூக செயற்பாட்டாளரும், சுற்றுச்சூழல் ஆர்வலருமான முகிலன் மாயமாகி 112 நாட்களுக்கும் மேல் ஆகிவிட்ட நிலையில், அவரை கண்டுபிடித்துத் தரக் கோரி ஹென்றி திபேன் என்ற சமூக செயற்பாட்டாளர் தொடர்ந்த வழக்கு இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, இந்த வழக்கை விசாரித்துவரும் சி.பி.சி.ஐ.டி. சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், முகிலன் மாயமான வழக்கில் துப்பு துலங்கியுள்ளது என்றும், இது தொடர்பான விவரங்களை வெளியே தெரிவித்தால் விசாரணை பாதிக்கப்படும் என்றும் தெரிவிக்கபட்டிருந்தது.

இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை மூன்று வாரங்களுக்கு ஒத்தி வைத்தனர்.