பாஜக நடிகர் எஸ்.வி.சேகரின் சகோதரர் மனைவி கிரிஜா வைத்தியநாதன்!

மத்திய பாஜக அரசின் வருமான வரித்துறை திடீர் சோதனை மேற்கொண்டதை அடுத்து தமிழக அரசின் தலைமைச் செயலாளராக இருந்த ராமமோகன ராவ் இன்று இடைநீக்கம் செய்யப்பட்டார்.

அவருக்கு பதிலாக, கிரிஜா வைத்தியநாதன் புதிய தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் முக்கிய பிரமுகரும், நடிகருமான எஸ்.வி.சேகரின் சகோதரர் மனைவி ஆவார்.

பாஜகவை சேர்ந்த தமிழக பொறுப்பு ஆளுநரான வித்யாசாகர் ராவுடன் தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கலந்து ஆலோசித்து, கிரிஜா வைத்தியநாதனை தமிழக அரசின் புதிய தலைமைச் செயலாளராக நியமித்திருக்கிறார்.

கூட்டி கழித்து பாருங்கள்… கணக்கு சரியாக வரும்…!

0a1d