“நா.முத்துக்குமார் மரணம் நியாயமில்லை”: கமல்ஹாசன் கோபமும், வருத்தமும்!

பிரபல திரைப்பட பாடலாசிரியர் நா.முத்துக்குமாரின் மரணம் தமிழ் திரையுலகினரை மட்டுமின்றி, உலகெங்கும் வாழும் தமிழர்கள் அனைவரையும் அதிர்ச்சிக்கும், துயரத்துக்கும் உள்ளாக்கியிருக்கிறது.

நா.முத்துக்குமாரின் இழப்பு குறித்து நடிகர் கமல்ஹாசன், கோபம், வருத்தம், ஆதங்கம் இழையோட தனது இரங்கலை ட்விட்டரில் பதிவு செய்துள்ளார். அவரது பதிவு:-

“நியாயமில்லை. 41 சாகும் வயதில்லை. நா.முத்துக்குமார் மிக மெதுவாய் செய்த தன் நலம் பேணாத் தற்கொலையால் கோபமே. எனினுமவர் கவிக்கும் நட்பிற்கும் நன்றி.

ஒரு முக்கியமான தமிழ் கவிஞர், சினிமாவிலும் நிறைய எழுதினார். உன் பிரிவால் வாடுகிறேன் நண்பா. புத்தகங்களில் நீ விட்டுச் சென்ற உன் எழுத்துக்களுக்காக நன்றி. பாதி வாழ்க்கையை அனுபவித்து வாழ்ந்திருப்பாய் என நம்புகிறேன் – இனி உன் படைப்புகளை நாங்கள் அனுபவிக்கப் போவதைப்போல!”

Read previous post:
0a5z
“மரணத்தின் சபையில் நீதி இல்லை”: கவிஞர் வைரமுத்து வேதனை

திரைப்பட பாடலாசிரியர் நா.முத்துக்குமார் மறைவுக்கு கவிஞர் வைரமுத்து வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி:- இலக்கியம் அறிந்த ஒரு பாடலாசிரியனைக் காலம் காவுகொண்டுவிட்டது. நா.முத்துக்குமாரின் மறைவுச் செய்தி சற்றும் எதிர்பாராதது.

Close