கமல் ட்விட்டால் பரபரப்பு: மண்டை காய்ந்த ரசிகர்கள்!
நடிகர் கமல்ஹாசன் சின்னத்திரையில் முதல்முறையாக நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதாலோ என்னவோ நிகழ்ச்சி பற்றிய சர்ச்சைகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.
விஜய் டிவியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியின் ஒளிப்பரப்பைத் தடை செய்ய வேண்டும்’ என்று இந்து மக்கள் கட்சியினர் சில நாள்களுக்கு முன்பு விஜய் டிவியின் முன்பு போராட்டம் நடத்தினர்.
மேலும், நிகழ்ச்சியில் பங்கேற்ற போட்டியாளர் காயத்ரி ரகுராம் ‘சேரி பிஹேவியர்ஸ்’ என திட்டியதால் அதுவும் சர்ச்சையானது.
இது குறித்து எல்லாம் விளக்கம் அளிக்க கமல் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தமிழக அரசை பற்றியும் அவரது விமர்சனத்தை வைத்தார். இதனால், அ.தி.மு.க-வைச் சேர்ந்த அமைச்சர்கள் தொடர்ந்து கமலை திட்டி வந்தனர். பின்னர், மு.க.ஸ்டாலின், கமலுக்கு ஆதரவாக அறிக்கை எல்லாம் வெளியிட்டார். அதற்கு கமலும் நன்றி தெரிவித்தார்.
இந்நிலையில், கமல் தனது ட்விட்டர் பக்கத்தில் புதிய ட்வீட்கள் செய்துள்ளார். முதல் ட்விட்டில், “அமையாது அலைபவர்க்கும் அமைந்த என் தோழர்க்கும், விரைவில் ஒரு விளி கேட்கும். கேட்டு அமைதி காப்பீர். உண்மை வெயிலில் காயும் நேற்றைய மழைக்காளான்’” என்று ட்விட்டினார்.
அவரது ரசிகர்கள் பலரும் இதன் பொருள் புரியாமல் மண்டை காய்ந்து, “அர்த்தம் புரியவில்லை” என தொடர்ந்து கமெண்ட் செய்தனர். அவர் தேர்தல் அரசியலில் குதிக்கப் போகிறாரோ என்று பத்திரிகை மற்றும் ஊடக வட்டாரங்களும் பரபரப்படைந்தன.
அடுத்த ட்விட்டாக, “புரியாதோர்க்கு ஆங்கில பத்திரிக்கையில் நாளை வரும் சேதி” என தலைப்பிட்டு கமல் ஒரு கவிதையை வடித்திருக்கிறார். அந்த கவிதை இதுதான்: