‘ஆரம்பமே அட்டகாசம்’ அறிமுக விழா!

ஜீவா நாயகனாக நடிக்கும் படம் ‘ஆரம்பமே அட்டகாசம்’. இதில் அவருக்கு ஜோடியாக சங்கீதா பட் நடிக்கிறார். இவர்களுடன் பாண்டியராஜன், ஞானசம்பந்தன், வையாபுரி, சாம்ஸ், ஸ்ரீநாத் மற்றும் பலர் நடிக்கிறார்கள். சுவாதி பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்தை ரங்கா இயக்குகிறார்.

இப்படத்தின் டீஸர் மற்றும் பர்ஸ்ட் லுக் ஏற்கெனவே வெளியாகியுள்ள நிலையில், இதன் அறிமுக விழா, சென்னை எம்.ஐ.டி. கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் இப்படத்தின் தலைப்பு பாடலை இயக்குனர் கே.பாக்யராஜ் வெளியிட, இயக்குனர் பாண்டியராஜன் பெற்றுக் கொண்டார்.

பாக்யராஜ் பேசுகையில், இந்த படத்தை தான் பார்த்து ரசித்ததாகவும், குறிப்பாக  படத்தில் ஜீவாவின் லிப்லாக் காட்சியை மிகவும் ரசித்ததாகவும் கூறினார்.