எப்படி இருந்த ஓவியா இப்படி ஆயிட்டாரு…!

விஜய் டிவி தினமும் ஒளிபரப்பும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று, தனது ஆளுமையால் பல கோடி ரசிகர்களின் இதயங்களில் இடம் பிடித்தவர் நடிகை ஓவியா. ஆனால், தன்னோடு அந்நிகழ்ச்சியில் பங்கேற்ற ஆரவ் தனது காதலைப் புறக்கணித்தது, காயத்ரி, சக்தி, ஜூலி போன்ற சக போட்டியாளர்கள் உண்மையாக இல்லாமல் கடுப்படித்தது போன்ற காரணங்களால் மனநிலை பாதிக்கப்பட்டு, தாறுமாறாக நடந்துகொண்ட அவர், தானாகவே ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார்.

அவ்விதம் வெளியேறியவர் ஒருநாள் சென்னையில் இருந்தார்.  அதன்பின் விமானம் மூலம் கேரளா சென்ற அவர், தன் வீட்டுக்குப் போய் அப்பா, பாட்டி ஆகியோரை சந்தித்து பேசிவிட்டு, தனது நெருங்கிய தோழியும், நடிகையுமான ரம்யா நம்பீசன் வீட்டிற்கு சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.

 இந்நிலையில்,  ஓவியாவுடன் ஒரு ரசிகர் சமீபத்தில் எடுத்த ஒரு புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. அதில் ஒரு பக்கம் பெண் போல் சற்று நீண்ட முடியுடனும், மறுபக்கம் ஆண் போல் ஒட்ட கத்தரிக்கப்பட்ட முடியுடனும் ஓவியா காட்சி அளிக்கிறார்.

எதற்காக இப்படி ஒரு வினோத ஹேர் ஸ்டைல்? அழகுக்காகவா? அல்லது ஏதாவது ஒரு படத்தில் நடிக்கும் கதாபாத்திரத்துக்காகவா? அல்லது சிகிச்சை அளிக்கும் மருத்துவரின் ஆலோசனையின் பேரிலா என்ற விவரம் எதுவும் தெரியவில்லை.