துப்பாக்கி, கத்தி, அரிவாளுக்கு ‘ஆயுத பூஜை’ செய்த அர்ஜூன் சம்பத்!

இந்துத்துவ வெறியரும், இந்து மக்கள் கட்சி தலைவருமான அர்ஜூன் சம்பத், துப்பாக்கி, கத்தி, அரிவாள் உள்ளிட்ட கொலைக்கருவிகளை வைத்து வழிபட்டு இன்று ஆயுத பூஜை கொண்டாடினார்.

இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “இன்று 10-10-2016 திங்கள் மதியம் 12 மணி முதல் 2 மணி வரை எனது இல்லத்தில் நடைபெற்ற சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை படங்கள்” என்ற தலைப்பில் சில படங்களை வெளியிட்டுள்ளார். (அவற்றில் ஒரு படம் தான் மேலே உள்ளது.)

அர்ஜூன் சம்பத்தின் இந்த காட்டுமிராண்டித்தனத்துக்கு சமூக வலைத்தளங்களில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டு வருகின்றன. போலீசிலும் புகார் செய்யப்பட்டுள்ளது.