உதயநிதியின் ‘நெஞ்சுக்கு நீதி’ படத்தை பார்த்து வாழ்த்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

0a1bZee Studios , போனி கபூரின் Bayview Projects மற்றும் ROMEOPICTURES ராகுல் இணைந்து தயாரித்திருக்கும் ‘நெஞ்சுக்கு நீதி’ படத்தில் உதயநிதி ஸ்டாலின் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இயக்குனர் அருண்ராஜா காமராஜ் இப்படத்தை இயக்கியுள்ளார்.

 தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “நெஞ்சுக்கு நீதி” திரைபடத்தை நுங்கம்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் திரையரங்கில் நேற்று பார்த்தார். படத்தை பார்த்தபின் “நெஞ்சுக்கு நீதி” படத்தின் நாயகன் உதயநிதி ஸ்டாலின், இயக்குனர் அருண்ராஜா காமராஜ், தயாரிப்பாளர்கள் போனி கபூர், ராகுல் என படக்குழுவினர் அனைவருக்கும் தனது வாழ்த்துகளை தெரிவித்தார்,

மே மாதம் 20 அன்று வெளியாகவுள்ள “நெஞ்சுக்கு நீதி” திரைப்படத்தை தமிழகமெங்கும் ரெட் ஜெயன்ட் மூவீஸ் நிறுவனம் வெளியிடுகிறது.