‘டங்கல்’ இடைவேளையில் சசிகலா: கவனித்தீர்களா… நீங்கள் கவனித்தீர்களா…?

கவனித்தீர்களா… நீங்கள் கவனித்தீர்களா…?

டங்கல் படத்தின் இடைவேளையின்போது, மறைந்த முதல்வர் ஜெயலலிதா குறித்த ஒரு இரங்கல் வீடியோ போடுகிறார்கள் (மக்கள் செய்தித்துறை சார்பில்).

ஜெயலலிதா அ.தி.மு.கவில் இணைந்ததில் இருந்து அவர் இறந்தது வரையிலான அவரது பயணத்தில் பல முக்கியமான காட்சிகளை ‘எங்கே சென்றாய் எங்கள் தாயே’ என்று சோகமான ஒரு பாட்டு பின்னணியில் ஒலிக்க தொகுத்திருக்கிறார்கள்.

கிட்டத்தட்ட நல்ல ஒரு தொகுப்புதான். பல அரிதான காட்சிகளை அதில் பார்க்க முடிகிறது. கொஞ்சம் சோகத்தையும் ஏற்படுத்துகிறது.

இயல்பாகவே முழுக்க முழுக்க ஜெயலலிதாவே அந்த தொகுப்பில் நிறைந்திருக்கிறார். எம்.ஜி.ஆர் முகம்கூட சில விநாடிகளுக்கு மேல் இடம் பெறவில்லை. அந்தளவிற்கு ஜெயலலிதாவின் முகமே எங்கும் நிறைந்திருக்கும் அந்த வீடியோவில் அவருக்குப் பின் க்ளோஸ்-அப்பில் இருப்பது இரண்டே இரண்டு காட்சிகள்தான்.

  1. வெங்கய்யா நாயுடு சோகத்துடன் உட்கார்ந்திருக்கும் காட்சி.
  2. சசிகலாவின் முகம் (தனியாக சில தடவை & அரசியல் தலைவர்கள் சசிகலாவிடம் ஆறுதல் கூறும் காட்சிகள்)

மக்களிடம் பொதுப்புத்தியை விதைக்கும் ஒரு ஊடகத்தின் வழி பரப்பப்படும் இதை மிக யதேச்சையாமானது என்றோ, இயல்பானது என்றோ கடந்துவிட முடியவில்லை.

இதை வேறு யாராவது கவனித்தீர்களா… நீங்கள் கவனித்தீர்களா…?

JEYACHANDRA HASHMI

 

 

 

 

Read previous post:
0a1b
அமீர் கானின் ‘டங்கல்’ பற்றி இருவேறு பார்வைகள்!

டங்கல் அட்டகாசம். முதல் பாதி பெரியாரியம். இரண்டாம் பாதி லகான். வருட இறுதியில் வெளியாகி, இந்த வருடத்தின் மிக பெரும் வெற்றியாக மாற இருக்கிறது. அமீர் கான்

Close