ஜெயலலிதாவுக்கு மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி!

மறைந்த முன்னாள் முதல்வரும் அ.தி.மு.க பொதுச்செயலாளருமான ஜெயலலிதாவுக்கு தி.மு.க. பொருளாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார்.

ராஜாஜி அரங்கில் உள்ள ஜெயலலிதா உடலுக்கு ஸ்டாலின் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். ஐ.பெரியசாமி, எ.வ.வேலு, மா.சுப்பிரமணியன், கே.என்.நேரு, ரங்கநாதன், பொன்முடி உள்ளிட்ட தி.மு.க. பிரமுகர்களும் உடன் சென்று அஞ்சலி செலுத்தினார்கள்.

ஜெயலலிதாவின் மறைவு பெரும் அதிர்ச்சியையும், வேதனையையும் உண்டாக்கியுள்ளது என ஸ்டாலின் கூறியுள்ளார். தமிழக மக்களுக்கு திமுக சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் எனவும் அவர் கூறியுள்ளார்.