“அடுத்த முதல்வர்” என்று கூறப்பட்ட அஜித் பல்கேரியாவில் இருந்து இரங்கல்!

ஜெயலலிதா உடல்நல்க் குறைவு காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தபோது, அவர் நடிகர் அஜித்குமாரை ரகசியமாக வரவழைத்து, “அடுத்த முதல்வர் நீங்கள் தான்” என்று கூறியதாக கேரள ஊடகங்களால் கதை விடப்பட்டு, இங்குள்ள மலையாளிகளாலும், தெலுங்கர்களாலும் உற்சாகமாக கொண்டாடப்பட்டது.

அவ்விதம் “அடுத்த முதல்வர்” என்று கூறப்பட்ட அஜித், ஜெயலலிதாவுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்தாமல், பல்கேரியாவில் படப்பிடிப்பில் இருந்துகொண்டு இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார். அஜீத்தின் இரங்கல் செய்தி:

மாண்புமிகு டாக்டர் புரட்சி தலைவி அம்மா அவர்களின் மறைவால் வாடும் என் சக தமிழ் நாட்டு மக்களுக்கும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக தொண்டர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.

பல்வேறு இன்னல்களை கடந்து சாதனை புரிந்த உயர்ந்த தலைவர் அவர். அவர் மீண்டும் ஆரோக்கியத்துடன் வர வேண்டும் என்று நாம் பிரார்த்தித்துக் கொண்டிருக்கும் வேளையில் அவர் மறைந்து விட்டார் என்ற செய்தி என்னை பேரதிர்ச்சிக்குள்ளாக்கியது. அவரது ஆன்மா சாந்தி அடைய எல்லாம் இறைவனை பிரார்த்திக்கிறேன். அவரது பிரிவால் வாடும் எனக்கும், எண்ணற்ற என் சக தமிழக மக்களுக்கும் இந்த பிரிவை தாங்கும் வல்லமையை தர இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.

இவ்வாறு அஜித் கூறியுள்ளார்.

Read previous post:
0a1e
ஜெயலலிதாவுக்கு மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி!

மறைந்த முன்னாள் முதல்வரும் அ.தி.மு.க பொதுச்செயலாளருமான ஜெயலலிதாவுக்கு தி.மு.க. பொருளாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார். ராஜாஜி அரங்கில் உள்ள ஜெயலலிதா உடலுக்கு

Close