மோடியை கட்டிப்பிடித்து கதறி அழுத ஓ.பி.எஸ்; கண்ணீர் விட்ட சசிகலா!

ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்த டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் சென்னை வந்தார் நரேந்திர மோடி. ராஜாஜி அரங்கிற்கு வந்த அவர், ஜெயலலிதாவின் உடல் மீது மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ், மத்திய அமைச்சர்கள் வெங்கய்யா நாயுடு, பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்திரராஜன் ஆகியோர் உடன் இருந்தனர்.

காலையில் இருந்து ராஜாஜி அரங்கின் ஓரமாக அமர்ந்திருந்த தமிழகத்தின் புதிய முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், மோடியை பார்த்ததும் எழுந்து வந்தார். பின்னர் அவர் மோடியை கட்டிப் பிடித்து கதறி அழுதார். உடனே மோடி பன்னீர்செல்வத்தின் தோளில் கை போட்டு ஆறுதல் கூறினார்.

0a1d

மோடியை பார்த்ததும் சசிகலாவும் அழத் துவங்கினார். உடனே மோடி, சசிகலாவின் தலையில் கை வைத்து ஆறுதல் கூறினார்.

மோடி கிளம்பிய பிறகு பன்னீர்செல்வம் மீண்டும் ஒரு ஓரமாக சென்று தரையில் உட்கார்ந்துவிட்டார்.

Read previous post:
0a1a
“அடுத்த முதல்வர்” என்று கூறப்பட்ட அஜித் பல்கேரியாவில் இருந்து இரங்கல்!

ஜெயலலிதா உடல்நல்க் குறைவு காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தபோது, அவர் நடிகர் அஜித்குமாரை ரகசியமாக வரவழைத்து, “அடுத்த முதல்வர் நீங்கள் தான்” என்று கூறியதாக

Close