ஜெயலலிதா உடல் ராஜாஜி அரங்கில்: தலை அருகில் சசிகலா குடும்பத்தினர்!

மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உடல் சென்னை அண்ணாசாலையில் உள்ள ராஜாஜி அரங்கத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

நீண்ட வரிசையில் காத்திருந்து அதிமுக தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கதறி அழுது அஞ்சலி செலுத்தி வருகின்றனர். மற்றொரு தனி வரிசையில் முக்கிய அரசியல் கட்சி தலைவர்கள் ஜெயலலிதா உடலுக்கு அருகில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

ஜெயலலிதா உடல் வைக்கப்பட்டுள்ள அவரது தலைக்கு அருகில் சசிகலா மற்றும் திவாகர் உள்ளிட்ட அவரது குடும்பத்தினர் உள்ளனர்.

தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தமிழக அமைச்சர்கள் மற்றும் முக்கிய தலைவர்கள் ஜெயலலிதாவின் உடலுக்கு முன் உள்ள படிக்கட்டுகளில் வரிசையாக அமர்ந்து உள்ளனர்.

0a1b

 

Read previous post:
0a1n
“ஜெயலலிதா உண்மையில் எப்போது இறந்தார் என்பதுகூட யாருக்கும் தெரியாத நிலை…!”

கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பு இயக்க ஒருங்கிணைப்பாளரும், பச்சைத் தமிழகம் கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான சுப.உதயகுமாரன் வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கை: மாண்புமிகு தமிழக முதல்வர் செல்வி ஜெ. ஜெயலலிதா அவர்களின்

Close