‘காக்கா முட்டை’ இயக்குனரின் விறுவிறு திரைக்கதையில் ‘குற்றமே தண்டனை’!

‘காக்கா முட்டை’ படத்தின் இயக்குனர் மணிகண்டன் இயக்கியிருப்பதாலும், விதார்த் நாயகனாக நடித்திருப்பதோடு, கதை பிடித்துப்போய் அவரே சொந்தமாய் தயாரித்திருப்பதாலும், விஜய் ஆண்டனி நடித்த ‘பிச்சைக்காரன்’, கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய ‘இறைவி’ ஆகிய தரமான வெற்றிப்படங்களை வெளியிட்ட கே.ஆர். பிலிம்ஸ் இரா.சரவணன் உலகெங்கும் வெளியிடுவதாலும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் ‘குற்றமே தண்டனை’ திரைப்படம், வருகிற (செப்டம்பர்) 2ஆம் தேதி திரைக்கு வருகிறது.

ரமேஷ், விக்னேஷ் ஆகிய இரண்டு சிறுவர்களுடன் ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்டோர் நடிக்க, குறைந்த பொருட்செலவில் மணிகண்டன் இயக்கிய படம் ‘காக்கா முட்டை’. நடிகர் தனுஷூம், இயக்குனர் வெற்றிமாறனும் இணைந்து தயாரித்த இப்படத்தை ஃபாக்ஸ் ஸ்டார் நிறுவனம் வெளியிட்டது. விமர்சகர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் இப்படத்துக்கு பெரும் வரவேற்பு கிடைத்தது. வசூலில் தயாரிப்பாளர்களுக்கு பெரிய லாபம் கிடைத்தது. அத்துடன், தேசிய விருதும், பல சர்வதேச பட விழாக்களின் விருதுகளும் இதற்கு கிடைத்தன.

‘காக்கா முட்டை’யை தொடர்ந்து மணிகண்டன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் ‘குற்றமே தண்டனை’. விதார்த் நாயகனாக நடித்திருப்பதோடு, அவரே இப்படத்தை தயாரித்திருக்கிறார். அவருடன் ஐஸ்வர்யா ராஜேஷ், பூஜா தேவரியா, நாசர், ரகுமான், குரு சோமசுந்தரம், மாரிமுத்து, ராஜசேகர், யோகி பாபு, ஜார்ஜ், பசி சத்யா, மோனா பெட்ர் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.

k6

பொது இடங்களில், பலர் முன்னிலையில் இளம்பெண்கள் படுகொலை செய்யப்படுவது நாளுக்கு நாள் அதிகரித்துவரும் இன்றைய சூழ்நிலையில், சமூக அக்கறையுள்ள இயக்குனர் மணிகண்டன், இந்த பிரச்சனையையே இப்படத்தில் கையில் எடுத்துள்ளார். ஓர் இளம்பெண் கொடூரமாக கொலை செய்யப்படுவதையும், அதனை தொடர்ந்து நிகழும் எதிர்பாராத சம்பவங்களையும் மையமாகக்கொண்டு, விறுவிறுப்பாகவும், சுவாரஸ்யமாகவும் இதன் திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது.

வழக்கமான க்ரைம் த்ரில்லராக இப்படம் இருக்காது என்றும், இளம்பெண் படுகொலையை முற்றிலும் வேறுபட்ட கோணத்தில், பதைபதைக்கச் செய்யும் விதத்தில், சிந்திக்கத் தூண்டும் வகையில் இது சித்தரிக்கும் என்றும், அனைத்து தரப்பு ரசிகர்களுக்கும் பிடித்ததாக இப்படம் இருக்கும் என்றும் நம்பிக்கையுடன் கூறுகிறது படக்குழு.

.படத்தில் பாடல்கள் கிடையாது. இளையராஜா பின்னணி இசை அமைத்துள்ளார். இப்படத்துக்கு ஆரம்பத்தில் வைக்கப்பட்ட ‘குற்றமும் தண்டனையும்’ என்ற பெயரை ‘குற்றமே தண்டனை’ என மாற்றுமாறு ஆலோசனை கூறியதும் இளையராஜா தான்.

ஏற்கெனவே பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு பாராட்டுக்களைப் பெற்றுள்ள இப்படத்துக்கு, திரைப்பட தணிக்கைக் குழு ‘யு/ஏ’ சான்றிதழ் கொடுத்திருக்கிறது.

இயக்கம், ஒளிப்பதிவு – எம்.மணிகண்டன்

இசை – இளையராஜா

கதை – ஆனந்த் அண்ணாமலை, எம்.மணிகண்டன்

படத்தொகுப்பு – அனுசரன்

தயாரிப்பு – எஸ்.ஹரிஹரநாகநாதன், எஸ்.முத்து, எஸ்.காளீஸ்வரன்

வெளியீடு – கே.ஆர். பிலிம்ஸ் இரா.சரவணன்

ஊடகத்தொடர்பு – நிகில்

Read previous post:
0
“சுவாதியை கொன்ற 4 பேர் சிக்கும்வரை விட மாட்டேன்”: ட்ராபிக் ராமசாமி ஆவேசம்!

சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் இளம்பெண் ஸ்வாதி வெட்டி கொல்லப்பட்டார். இக்கொலைக்கு ஒருதலைக்காதல் காரணம் என்று கூறி, நெல்லை மாவட்டம் மீனாட்சிபுரத்தை சேர்ந்த ராம்குமார் என்ற இளைஞரை

Close