கூடங்குளம் அணுக்கழிவு மையம்: தயாநிதி மாறன் கேள்வியும், ஒன்றிய அமைச்சரின் அபத்தமான பதிலும்!

கூடங்குளம் அணுக்கழிவு மேலாண்மை மையம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பிய திரு.தயாநிதி மாறன் அவர்களுக்கு நன்றி.

அந்த கேள்விக்கு அமைச்சர் அளித்த அபத்தமான பதில், இந்த விஷயத்தை அமைச்சர் எவ்வளவு அலட்சியமாக பார்க்கிறார் என்று தெரிகிறது. அவர் சொன்ன பதில்களில் சில தவறான தகவல்கள்:-

  1. அணுவுலைகளில் பயன்படுத்திய எரிபொருளை (அணுக்கழிவுகள்) முதல் 7 ஆண்டுகளுக்கு அணுவுலைகளுக்குள் உள்ள “spent fuel pool”லில் (பயன்படுப்பட்ட எரிபொருள் குளம்) வைக்கவேண்டும். ஏனென்றால் அதன வெப்பமும் கதிர்வீச்சும் மிகக்கடுமையாக இருக்கும், யாரும் நெருங்க முடியாது. (அமைச்சர் இதை இரண்டு நாட்கள் அல்லது மாதங்கள் உள்ளே வைக்கவேண்டும் என்கிறார்.)
  2. 7 ஆண்டுகள் கழித்த பிறகு தற்காலிகமாக AFRல் அடுத்த 50 ஆண்டுகளுக்கு வைக்கப்படும் என்கிறார். AFRன் காலமே 75 ஆண்டுகள்தான், அதனால் 15- 20 ஆண்டுகளுக்கு பிறகு, முதலில் வந்த கழிவுகளை “ஆழ்நில அணுக்கழிவு மையத்திற்கு” மாற்றவேண்டும். இதன் காரணமாகத்தான் அமைச்சர் தன்னுடைய பதிலில் “ஆழ்நில அணுக்கழிவு மையம்” குறித்த எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை.
  3. இந்தியாவில் மற்ற உலைகளில் இதைத்தான் செய்திருக்கிறோம் என்கிறார் அமைச்சர்.

பூவுலகின் நண்பர்கள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், இந்தியாவில் முதல்முறையாக இங்கேதான் இப்படிப்பட்ட AFR அமைக்கிறோம், மிகவும் கடுமையான சவால் நிறைந்த பணி என்பதால் மேலும் அதிக காலம் தேவைப்படும் என்று தேசிய அணுமின் கழகம் எழுத்துபூர்வமாக தெரிவித்தது. இந்தியாவில் மென்நீர் உலைகள் கிடையாது, கூடங்குளம் தான் முதல் உலை, அதனால் இந்தியாவில் கூடங்குளத்தில் தான் முதல்முறையாக இப்படிப்பட்ட அமைப்பு உருவாக்கப்படுகிறது.

பொதுக்கூட்டங்களில் தவறான தகவல்கள் தருவதை பார்த்திருக்கிறோம், ஆனால் நாடாளுமன்றத்தில் தவறான தகவல் தெரிவிக்க “எதைப்பற்றியும் கவலைப்படாத” மனநிலை வேண்டும்.

SUNDAR RAJAN

 

Read previous post:
0a1a
காவிரி படுகையில் மேலும் 104 ஹைட்ரோ கார்பன் கிணறுகள்: பூவுலகின் நண்பர்கள் கண்டனம்

பூவுலகின் நண்பர்கள் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை:- நெடுவாசல், கதிராமங்கலம் உள்ளிட்ட காவிரி டெல்டா பகுதிகளில் ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கு விவசாயிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பி போராட்டங்கள் வெடித்த

Close