நடிகை / கின்னஸ் சாதனை பெண் இயக்குனர் விஜய நிர்மலா மரணம்

அதிக படங்களை இயக்கி கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த பெண் இயக்குநரும் பழம்பெரும் நடிகையுமான விஜயநிர்மலா உடல்நலக் குறைவு காரணமாக ஹைதராபாத்தில் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 73.

விஜயநிர்மலா 1950ஆம் ஆண்டு ’மச்சரேகை’ என்ற தமிழ்ப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். ‘எங்க வீட்டுப் பெண், சித்தி, பந்தயம், நீலகிரி எக்ஸ்பிரஸ், பணமா பாசமா, சிரித்த முகம், சத்தியம் தவறாதே, சோப்பு சீப்பு கண்ணாடி, உயிரா மானமா, அன்பளிப்பு, என் அண்ணன், யானை வளர்த்த வானம்பாடி மகன், ஞான ஒளி, வாழையடி வாழை, புதிய மனிதன், சுமங்கலி கோலம்’ உள்ளிட்ட  தமிழ்ப் படங்களில் அவர் நடித்திருக்கிறார்.

தமிழ், தெலுங்கு, மலையாளத்தில் சுமார் 200 திரைப்படங்களில் நடித்துள்ள விஜயநிர்மலா, தெலுங்கில் 44 படங்களை இயக்கி ‘அதிக படங்களை இயக்கிய பெண் இயக்குனர்’ என்ற புகழுடன் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார். சாவித்திரிக்கு அடுத்தபடியாக விஜயநிர்மலா மட்டுமே நடிகர் சிவாஜி கணேசனை இயக்கிய பெண் இயக்குனர் என்பது குறிப்பிட்த்தக்கது.

 

 

Read previous post:
0a1a
கூடங்குளம் அணுக்கழிவு மையம்: தயாநிதி மாறன் கேள்வியும், ஒன்றிய அமைச்சரின் அபத்தமான பதிலும்!

கூடங்குளம் அணுக்கழிவு மேலாண்மை மையம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பிய திரு.தயாநிதி மாறன் அவர்களுக்கு நன்றி. அந்த கேள்விக்கு அமைச்சர் அளித்த அபத்தமான பதில், இந்த விஷயத்தை

Close