முழுக்க முழுக்க அரசியல் பற்றி பேசும் படம் ‘கொடி’: தனுஷ் அறிவிப்பு

தீபாவளிக்கு திரைக்கு வர இருக்கும் ‘கொடி’ திரைப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு இன்று சென்னை பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது.

இதில் நாயகன் தனுஷ், இப்படத்தின் தயாரிப்பாளர் இயக்குனர் வெற்றிமாறன், மதன், கோபால் ஜேம்ஸ், நாயகி அனுபமா பரமேஸ்வரன், படத்தின் இயக்குனர் துரை செந்தில்குமார், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், ஒளிப்பதிவாளர் வெங்கடேஷ், படத்தொகுப்பாளர் பிரகாஷ் மப்பு, நடன இயக்குனர் பாபா பாஸ்கர், நடிகர்கள் மாரிமுத்து, காளி வெங்கட் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சியில் ‘கொடி’ நாயகன் தனுஷ் பேசியதாவது:

இதுவரை நான் நடித்த திரைப்படங்களான புதுப்பேட்டை’ போன்ற திரைப்படங்களில் சிறிய அளவில் அரசியல் இருக்கும். ஆனால் இப்படம் முழுக்க முழுக்க அரசியல் பற்றி பேசும் ஒரு படமாக இருக்கும்.

k1

இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு மிகச் சிறந்த இசையை கொடுத்துள்ளார் அவருக்கு நன்றி. நான் ‘குக்கூ’ திரைப்படத்தில் இருந்து அவருடைய இசையை உற்று நோக்கி வருகிறேன். இப்படத்தில் அவரோடு பணியாற்றுவது மகிழ்ச்சி.

இப்படத்திற்கு நான் டப்பிங் பேசி முடித்துவிட்டேன். இப்படம் நான் முதன்முதலில் நடிக்கும் இரட்டை வேட திரைப்படம். இப்படத்தின் கதையை இயக்குனர் துரை செந்தில்குமார் என்னிடம் கூறியபோது, கதை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. நாம் இரட்டை வேடத்தில் நடிக்க இதுவே சரியான படமாக இருக்கும் என முடிவு செய்து இப்படத்தில் நடித்தேன். படம் மிகச்சிறப்பாக வந்துள்ளது.

இப்படம் அரசியல் பற்றி பேசும் படமா? அல்லது, அரசியல் பற்றி இளைஞர்களுக்கு கருத்து கூறும் திரைப்படமா? என்பது நீங்கள் வந்து திரையில் பார்க்கும்போது உங்களுக்குப் புரியும் , பிடிக்கும்.

இப்படத்தில் 8 வருடமாக ஒன்றாக பணியாற்றிய நண்பர்கள் அனைவரும் இணைந்து பணியாற்றியுள்ளோம். எங்கள் அனைவருக்கும் இது முக்கியாமான திரைப்படமாக இருக்கும்.

இவ்வாறு தனுஷ் பேசினார்.

Read previous post:
k2
“என் வாழ்க்கையில் பல நல்ல விஷயங்கள் நடக்க காரணம் தனுஷ்”: வெற்றி மாறன் நெகிழ்ச்சி!

தனுஷ் முதன்முதலாக இரு வேடங்களில் நடித்திருக்கும் படம் ‘கொடி’. வருகிற தீபாவளிக்கு திரைக்கு வர இருக்கும் இப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பில், இதன் தயாரிப்பாளரான இயக்குனர் வெற்றி மாறன் பேசியதாவது:

Close