அரசியல் தகுதியை பேசாமல் ‘அகடமிக்’ தகுதியை பேசும் அன்புமணி!

ஏன் பாஸ்! எதுக்கெடுத்தாலும், “நானு எம்.பி.பி.எஸ்… நானு எம்.பி.பி.எஸ்… நானு எம்.பி.பி.எஸ்! என்னை ‘சி.எம்.’ ஆக்குகுங்க”ன்னு பினாத்துறீங்களே? எங்க ஏரியாவுல ஒருத்தரு, “நானு எம்.எஸ்… எப்.ஆர்.சி.எஸ்! என்னை ‘கவர்னரு’ ஆக்குவீங்களான்னு கேக்குறாரு!  நானு என்னத்தை ஜொள்றது? ஜொள்ளுங்கோ!

அதுசரி, தமிழ்நாட்டுலியே நீங்க ஒருத்தரு மட்டும்தான் எம்.பி.பி.எஸ்.சா? இப்ப சட்டசபையிலயே கிருஷ்ணசாமி தொடங்கி நிறைய எம்.பி.பி.எஸ் இருக்குறாங்க! அதுமட்டுமில்லாம, உங்க பா.ம.க. தொடங்கி, எல்லா கட்சியிலயும் மருத்துவர் அணின்னு 1008 பேரு இருக்காங்க! தமிழ்நாட்டுல லட்சக்கணக்குல டாக்டர்ஸ் இருக்காங்க! நீங்க அதைபோய் ‘சி.எம்.’ தகுதியா பினாத்திகிட்டு திரியறீங்க!அரசியல்ல அரசியல் தகுதியை பேசாம, ‘அகடமிக்’ தகுதியை பேசுறீங்க!

ஒரே ஒரு நிமிஷம்… சமூகத்துக்காக ஜெயிலுக்கு போய் இருப்பீங்களா? போராட்டத்துல முன்ன நின்னு அடி வாங்கி இருப்பீங்களா? போஸ்டர் ஒட்டி இருப்பீங்களா?

ஒங்க மந்திரி பதவி, தி.மு.க.கிட்ட கெஞ்சி ஒங்க அப்பாரு வாங்கிக் கொடுத்தது! உங்க டாக்டர் படிப்பு திராவிட இயக்கம் சமூக போராட்டம் மூலமா வாங்கிக் குடுத்தது!

இனிமேலாவது  ஒங்க சொந்த தகுதிய பேசுங்க…! சாதி தகுதியை(!?) தவிர!

Read previous post:
21
2004 சுனாமியால் நடந்த ஒரே நல்ல காரியம் இது மட்டுமே!

மாமல்லபுரம் செல்லும் பலருக்கு இந்த விடயம் தெரியாது. சென்னையில் இருந்து மாமல்லபுரம் செல்லும் கிழக்கு கடற்கரை சாலையில் சாளுவன்குப்பம் என்ற கிராமம், அப்போதைய பெயர் திருவிழிச்சில். இங்கே

Close