“கருணாநிதியை நான் பார்க்க முடியவில்லை!” – ரஜினிகாந்த்

ரஜினிகாந்த் நடிப்பில், கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் படத்தின் படப்பிடிப்பு டேராடூனில் நடைபெற்றது. இப்படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் சென்னை திரும்பிய ரஜினி, திமுக தலைவர் கருணாநிதி அனுமதிக்கப்பட்டிருக்கும் காவேரி மருத்துவமனைக்கு இன்று (31-07-2018) இரவு சுமார் 9 மணியளவில் வந்தார்.

அங்கு மு.க.அழகிரி, மு.க.ஸ்டாலின், கனிமொழி உள்ளிட்ட கருணாநிதியின் குடும்பத்தினரை சந்தித்து, கருணாநிதியின் உடல்நிலை குறித்து கேட்டறிந்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினி, “இந்திய அரசியலின் மூத்த தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து மு.க.அழகிரி, மு.க.ஸ்டாலின், கனிமொழி, செல்வம் உள்ளிட்டோரிடம் கேட்டறிந்தேன். அவர்களுக்கு ஆறுதல் கூறினேன். அவர் உடல்நிலை குணமடைய இறைவனிடம் பிரார்த்திக்கிறேன். அவர் தூங்கிக்கொண்டிருப்பதாகச் சொன்னார்கள். அதனால் அவரை நான் பார்க்க முடியவில்லை” என்றார்.

0a1h

Read previous post:
0a1h
“கருணாநிதி இன்னும் சிறிது காலம் தங்கி சிகிச்சை பெற வேண்டும்”: மருத்துவமனை அறிக்கை

திமுக தலைவர் கருணாநிதி சிகிச்சை பெற்றுவரும் சென்னை காவேரி மருத்துவமனையின் நிர்வாகம் சார்பில் இன்று (31-07-2018) மாலை 6.30 மணிக்கு அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது. அதில் கூறப்பட்டிருப்பதாவது:

Close