பாஜக நடிகர் எஸ்.வி.சேகர் மீது வழக்கு தொடர்ந்தது பத்திரிகையாளர் மன்றம்!

பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த காமெடி நடிகர் எஸ்.வி.சேகர், “பெரிய ஆட்களுடன் படுக்காமல் பெண்கள் ரிப்போர்ட்டர் ஆக, செய்தி வாசிப்பாளர் ஆக முடியாது” என முகநூலில் தரம் தாழ்ந்து அவதூறாக எழுதியது பத்திரிகையாளர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், திருநெல்வேலி 1-வது குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்றத்தில் எஸ்.வி.சேகர் மீது, திருநெல்வேலி பத்திரிகையாளர் மன்றத் தலைவர் கோபால்சாமி அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார்.

வழக்கை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட மாஜிஸ்திரேட் (பொறுப்பு) பிஸ்மிதா, விசாரணையை வரும் 25ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளார்.

Read previous post:
0a1a
எச்ச ராஜாவும், நாய் சேகரும் சைபர் சைக்கோக்கள்: அமைச்சர் ஜெயக்குமார் திடீர் ஆவேசம்!

தங்களை விளம்பரம் செய்துகொள்வதற்கான எந்த நல்ல சரக்கும் இல்லாத பார-தீய ஜனதா கட்சியின் எச்ச ராஜா என்ற எச்.ராஜாவும், நாய் சேகர் என்ற எஸ்.வி.சேகரும், கவன ஈர்ப்புக்காக,

Close