எச்ச ராஜாவும், நாய் சேகரும் சைபர் சைக்கோக்கள்: அமைச்சர் ஜெயக்குமார் திடீர் ஆவேசம்!
தங்களை விளம்பரம் செய்துகொள்வதற்கான எந்த நல்ல சரக்கும் இல்லாத பார-தீய ஜனதா கட்சியின் எச்ச ராஜா என்ற எச்.ராஜாவும், நாய் சேகர் என்ற எஸ்.வி.சேகரும், கவன ஈர்ப்புக்காக, தமிழக மக்கள் மத்தியில் ஆத்திரத்தைத் தூண்டி கலவரத்தை ஏற்படுத்தும் தீய நோக்கில் தான் தோன்றித்தனமாக தரம் தாழ்ந்து பேசியும், எழுதியும் வருகிறார்கள்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், “விளம்பரம் தேடும் எச்.ராஜாவும் எஸ்.வி.சேகரும் சைபர் சைக்கோக்கள்” என ஆவேசமாக குறிப்பிட்டார்.
மேலும், “சேகர் மீது பத்திரிகையாளர்கள் புகார் கொடுத்தால் நடவடிக்கை எடுப்போம். அவரை கைது செய்வோம்” என்றும் ஜெயக்குமார் தெரிவித்தார்.
இதனை அடுத்து, சேகருக்கு எதிராக அதிகாரப்பூர்வமாக புகார் கொடுக்க பத்திரிகையாளர்கள் முடிவு செய்திருக்கிறார்கள்.