இளையராஜாவிடம் வாழ்த்து பெற்ற ‘காத்தாடி’ நாயகன்!

கேலக்ஸி  பிக்சர்ஸ் பட நிறுவனம் சார்பாக ஸ்ரீனிவாஸ் சம்மந்தம்  தயாரிக்கும் படம் ‘காத்தாடி’. இந்த படத்தில் அவிஷேக் நாயகனாக நடிக்கிறார். இவர் பிரபல நடிகை ஸ்ரீதேவியின் அக்கா மகனும், பிரபல நடிகை மகேஸ்வரியின் சகோதரரும் ஆவார். என்பது குறிப்பிடத்தக்கது. கதாநாயகியாக தன்ஷிகா நடிக்கிறார். இவர் தற்போது ரஜினிகாந்த் நடிக்கும் கபாலி படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

இவர்களுடன் சம்பத், ஜான் விஜய், மனோபாலா, கோட்டா சீனிவாசராவ், வி.எஸ்.ராகவன், காளி வெங்கட், சுமார் மூஞ்சி குமார் டேனியல், நான் கடவுள் ராஜேந்திரன், பசங்க சிவகுமார், லொள்ளு சபா மனோகர், வினோதினி, மதுமிதா, சூப்பர்குட் சுப்பிரமணி, சேரன்ராஜ். மற்றும் முக்கிய கதாப்பாத்திரத்தில் பேபி சாதன்யா ஆகியோர் நடிக்கிறார்கள்.

ஒளிப்பதிவு – ஜெமின் ஜோம் அயாநாத்                                                

பாடலிசை – பவன்

பின்னணி இசை –  தீபன்

பாடல்கள் – மோகன்ராஜன்

ஸ்டன்ட்    – அன்பறிவ்

கலை – ஜெய்

தயாரிப்பு மேற்பார்வை – அரவிந்த்

கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்  –  எஸ்.கல்யாண்.

ஊடகத்தொடர்பு – மௌனம் ரவி

லிப்பி சினி கிராப்ட்ஸ் வி.என்.ரஞ்சித்குமாரும், ஒயிட் ஹார்ஸ் ஸ்டியோஸ் கே.சசிகுமாரும்  இந்த படத்தை உலகம் முழுதும் வெளியிடுகிறார்கள்.

0a3z

இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது. விழாவில் பிரபல பின்னணி பாடகி பி.சுசீலா, நடிகைகள் மீனா, மகேஸ்வரி, இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத், நடிகர்கள் ஆரி, கயல் சந்திரன், மங்காத்தா அஸ்வின், ஜான் விஜய், படத்தின் இயக்குனர் எஸ்.கல்யாண், நாயகன் அவிஷேக், நாயகி தன்ஷிகா, படத்தின் தயாரிப்பாளர் ஸ்ரீனிவாஸ் சமந்தம், படத்தை வெளியிடும் வி.என்.ரஞ்சித்குமார், கே.சசிகுமார் ஆகியோர் பங்கேற்றனர்.

‘காத்தாடி’ இசை வெளியீட்டைத் தொடர்ந்து இளையராஜா, யுவன்சங்கர்ராஜா வெங்கட்பிரபு ஆகியோரை நாயகன் அவினேஷ், தயாரிப்பாளர்  ஸ்ரீனிவாஸ் ஆகியோர் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

Read previous post:
0a1v
கௌரவ வேடத்தில் நடித்ததற்கு சம்பளம் வாங்க மறுத்த தனுஷ்!

இயக்குநர் ஆனந்த் எல்.ராயின் 'நிம்மோ' படத்தில் கவுரவ வேடத்தில் நடித்துள்ள தனுஷ், அதற்காக கொடுக்கப்பட்ட சம்பளத்தை வாங்க மறுத்து பாத்திரத்துக்காக விட்டார். இந்தி திரையுலகில் தனுஷை 'ராஞ்சனா'

Close