கௌரவ வேடத்தில் நடித்ததற்கு சம்பளம் வாங்க மறுத்த தனுஷ்!

இயக்குநர் ஆனந்த் எல்.ராயின் ‘நிம்மோ’ படத்தில் கவுரவ வேடத்தில் நடித்துள்ள தனுஷ், அதற்காக கொடுக்கப்பட்ட சம்பளத்தை வாங்க மறுத்து பாத்திரத்துக்காக விட்டார்.

இந்தி திரையுலகில் தனுஷை ‘ராஞ்சனா’ (RAANJHANAA) படத்தின் மூலமாக அறிமுகப்படுத்தியவர் இயக்குநர் ஆனந்த் எல்.ராய். இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் வரவேற்பைப் பெற்றது. அப்படத்தைத் தொடர்ந்து அமிதாப்பச்சனுடன் இணைந்து பால்கி இயக்கத்தில் ‘ஷமிதாப்’ படத்தில் நடித்தார் தனுஷ்.

இயக்குநர் ஆனந்த் எல்.ராய் உடன் நெருங்கிய நட்புடன் பழகி வருகிறார் தனுஷ். தற்போது இயக்குநர் ஆனந்த் எல்.ராய் ‘நிம்மோ’ என்று பெயரிடப்பட்டுள்ள படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் கவுரவ வேடத்தில் நடித்திருக்கிறார் தனுஷ்.

கவுரவ வேடத்தில் நடித்ததற்காக ஆனந்த் எல்.ராய் சம்பளம் கொடுக்க, அதை மறுத்து, வேண்டாம் என்று கூறிவிட்டார் தனுஷ். இச்செயலால் மிகவும் நெகிழ்ந்துவிட்டார் ஆனந்த் எல்.ராய்.

Read previous post:
0a3w
புத்தக கண்காட்சியில் அன்னை தெரசாவிடம் ஆசி பெறலாம், வாங்க…!

சென்னை கிழக்கு கடற்கரை சாலையிலுள்ள வி.ஜி.பி.ஸ்நோ கிங்டம் வளாகத்தில் ஓவியர் ஏ.பி. ஸ்ரீதரின் கலைவண்ணத்தில் உருவான இந்தியாவின் முதல்  தந்திரகலை அருங்காட்சியகம் கடந்த மாதம் துவங்கப்பட்டது. இதற்கு

Close