‘கபாலி’ படத்தின் நீக்கப்பட்ட காட்சிகள் நாளை வெளியாகிறது!

பா.இரஞ்சித் இயக்கத்தில், ரஜினிகாந்த் வித்தியாசமான வேடத்தில் நடித்து, வசூல் சாதனையை நிகழ்த்திய படம் ‘கபாலி’.

2016ல் மிகப் பெரிய வெற்றியைப் பெற்ற இந்த படம், 2017ஆம் ஆண்டிலும் ரசிகர்களை குஷிப்படுத்த வருகிறது. ஆம், ‘கபாலி’ படத்தில் இருந்து நீக்கப்பட்ட காட்சிகளை நாளை இணையத்தில் வெளியிடவுள்ளனர்.

ரசிகர்களுக்கு புத்தாண்டு விருந்தாக நாளை வெளியிடப்படும் இந்த காட்சிகள், 2017ஆம் ஆண்டில் யூடியூப் பார்வைகளிலும் ‘கபாலி’ சாதனை படைக்க உதவும் என்பதில் சந்தேகம் இல்லை.

0a1b