சுவாச கருவிகள் உதவியில் ஜெயலலிதா: அப்போலோ நிர்வாகம் அறிவிப்பு!

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சுவாசக் கருவிகள் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. சுவாசக் கருவிகள் உதவியுடன் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதை முதல்முறையாக அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் ஒத்துக்கொண்டுள்ளது.

இன்று இரவு அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “முதல்வர் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்டு வரும் தொடர் சிகிச்சையை அடுத்து உடல்நிலையில் தொடர்ந்து முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. கிருமி தொற்றுக்கான சிகிச்சை, சுவாச உதவி (respiratory support) உள்ளிட்டவை அளிக்கப்பட்டு வருகிறது. முதல்வருக்கான சிகிச்சையை மருத்துவர்கள் குழு தொடர்ந்து கண்காணித்து வருகிறது. மேலும், முதல்வர் ஜெயலலிதா இன்னும் சில நாட்கள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற அறிவுறுத்தப்பட்டுள்ளது” என கூறப்பட்டுள்ளது.

அப்போலோ மருத்துவமனை அறிக்கை:

0a1e