தமிழகத்தில் ‘எம்.எஸ்.தோனி’ திரைப்படம் ரூ.7கோடி வசூலித்து சாதனை!

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் மகேந்திரசிங் தோனியின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு ஹிந்தியில் தயாரிக்கப்பட்ட ‘M.S.DHONI: UNTOLD STORY’ திரைப்படம், தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு, ‘எம்.எஸ்.தோனி’ என்ற பெயரில் தமிழகமெங்கும் வெளியிடப்பட்டது.

தமிழக ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள இந்த படம், தமிழகத்தில் மட்டும் இதுவரை ரூ.7 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

இதுவரை வெளியான தமிழ் மொழிமாற்றுப் படங்களின் வசூல் சாதனையை ‘எம்.எஸ்.தோனி’ முறியடித்து, தனித்து விளங்குகிறது.

இப்படம் வெளியான அனைத்து திரையரங்குகளிலும் ஹவுஸ் ஃபுல்லாக ஓடிக்கொண்டிருப்பதால், திரையரங்குகளின் எண்ணிக்கையும், நாளொன்றுக்கு திரையிடப்படும் காட்சிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இதனால் வசூலும் அதிகரித்து மேலும் சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Read previous post:
0a
சுவாச கருவிகள் உதவியில் ஜெயலலிதா: அப்போலோ நிர்வாகம் அறிவிப்பு!

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சுவாசக் கருவிகள் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. சுவாசக் கருவிகள் உதவியுடன் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு

Close