“நெடுவாசல் போராட்டத்தை இனி அரசுகள் இப்படி சீர்குலைக்கும்…!”

போராட்டக்காரர்களை போலீஸ் அடிக்க தொடங்கி இருக்கிறது. ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு அனுமதி கொடுக்கப்பட மாட்டாது எனவும், மக்கள் போராட்டத்தை கைவிட வேண்டும் எனவும் தமிழக அரசு சொல்லியிருக்கிறது.

இது முக்கியமான தருணம். System has started to act openly. கார்ப்பரெட்டுகள் அரசுகளின் கழுத்தை இறுக்க ஆரம்பித்து விட்டன. The breaking point! இனி காட்சிகள் எப்படியெல்லாம் மாறக்கூடும் என ஒரு பார்வை:

  1. அந்நிய நாட்டு சக்திகளின் ஆதரவில் நடத்தப்படும் வளர்ச்சிக்கு எதிரான தேசவிரோத போராட்டம் என்பார்கள்.
  2. ISIS ஊடுருவல் என்பார்கள்.
  3. சமூக விரோத அமைப்புகளின் கைகளுக்கு போராட்டம் சென்றுவிட்டதாக சொல்வார்கள்.
  4. பின் லேடன் வீட்டு சமையல்காரனின் படத்தை கூட்டத்தில் ஒருவர் வைத்திருந்தார் என சொல்வார்கள்.
  5. சினிமாக்காரர்களை கொண்டு போராட்டத்தை ஹைஜேக் செய்ய முயலுவார்கள்.
  6. ஹைட்ரோகார்பன் திட்டத்தை கைவிட்டுவிட்டோம் என எந்த அத்தாட்சியும் இல்லாமல் அறிவிப்பார்கள்.
  7. போராட்டத்துக்குள் சாதி பிரச்சினை கிளப்பி விடப்படும். இந்துத்துவ கும்பல் ஊடுருவும்.
  8. மற்ற ஊர்களில் இருந்து நெடுவாசல் துண்டாக்கப்படும்.
  9. தமிழக பட்ஜெட், தீபா என வேறு பிரச்சினைகள் உருவாக்கப்பட்டு ஊடகங்களால் ஊதி பெரிதாக்கப்பட்டு, கவனம் திசைதிருப்பப்படும்.
  10. சுப்ரமணியன் சுவாமி தமிழக சட்டம் ஒழுங்கு பற்றி திருவாய் மலர்வார். போலீஸ் தடியடி நடத்தி போலியாக கலவரத்தை உருவாக்கும். துணை ராணுவம் வரும்.

இவற்றை கருத்தில் கொண்டு மாற்று உத்திகளுக்கு நாமும் தயாராவோம்!

RAJASANGEETHAN