“நெடுவாசலில் மட்டும் அல்ல; அதை சுற்றியுள்ள கிராமங்களிலும் திட்டத்தை கைவிட வேண்டும்!”

முக்கியமான பதிவு. தயவு செய்து படிக்கவும்.

நெடுவாசல் என்பது ஒரு குறியீடு மட்டுமே. ஆனால் உண்மையில் ஐந்தாறு ஆண்டுகளுக்கு முன்பே “மண்ணெண்ணை எடுக்கிறோம்” என்ற பெயரில்  விவசாயிகளை ஏமாற்றி ONGC நிறுவனத்தின் மூலம் நல்லாண்டார் கொல்லை, வடகாடு, வானக்கண்காடு, கோட்டைக்காடு என நெடுவாசலைச் சுற்றிய கிராமங்களில் ஆழ்துளைக் கிணறுகளை அமைத்தே வைத்திருக்கிறனர். குழாயை பொருத்தி எரிவாயுவை எடுப்பது மட்டும்தான் பாக்கி!

இதில் குறிப்பிடத் தகுந்த விடயம் என்னவெனில், நெடுவாசலில் இன்னும் ஆழ்துளைக் கினறு அமைக்கப்படவே இல்லை. “மைக் புடுங்கி கும்பல்கள்” மூலம் நெடுவாசல் களத்திலிருந்து ‘நெடுவாசல் திட்டம் கைவிடப்பட்டது’ என்ற உளறல் எழுப்பப்படலாம். தயவு செய்து ஏமாந்து விடாதீர்கள் தமிழர்களே.

போராட்டம் வெற்றியடைந்து, நெடுவாசல் திட்டம் கைவிடப்பட்டது என்ற அறிக்கை மட்டும் போதாது. நெடுவாசலைச் சுற்றிய கிராமங்களிலும் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டம் கைவிடப்பட்டது என்ற செய்தியே உண்மையான வெற்றி!!!

RAJA THANGASAMY