முதல்வர் வேண்டுகோளை ஏற்க நெடுவாசல் போராளிகள் மறுப்பு: “போராட்டம் தொடரும்!”

“புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல்: ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு தமிழக அரசு அனுமதி அளிக்காது. எனவே, போராட்டத்தை கைவிடுங்கள்” என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்த வேண்டுகோளை நெடுவாசல் போராட்டக்காரர்கள் ஏற்க மறுத்து விட்டார்கள்.

”எடப்பாடி பழனிச்சாமி எத்தனை நாட்களுக்கு முதல்வராக இருப்பார் என்று தெரியாத நிலையில், அவரது பேச்சை நாங்கள் எப்படி நம்புவது?” என்று போராட்டக்காரர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

மேலும், “மத்திய அரசு தான் இந்தத் திட்டத்திற்கு அனுமதி வழங்கியுள்ளது. எனவே, மத்திய அரசிடம் இருந்து முறைப்படி ரத்து அறிவிப்பு வந்தால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவோம். அது வரை போராட்டத்தை தொடர்வோம்” என்று போராடும் மக்கள் உறுதிபட தெரிவித்துள்ளார்கள்.