பிரபல நடிகை ஜோதிலட்சுமி காலமானார்

பழம்பெரும் திரைப்பட நடிகை ஜோதிலட்சுமி உடநலக்குறைவால் காலமானார். ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த அவர், சென்னை தியாகராய நகரில் உள்ள அவரது இல்லத்தில் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 66.

1963ஆம் ஆண்டு ‘பெரிய இடத்துப் பெண்’ திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகுக்கு அறிமுகமானவர் நடிகை ஜோதிலட்சுமி. அன்று முதல் சமீபகாலம் வரை தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

0a4z

சில படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்திருந்தாலும், ‘காமவலை வீசி மயக்கும் பெண்’ என்று சொல்லப்படும் VAMP கேரக்டரில் தான் பெரும்பாலான படங்களில் அவர் நடித்திருக்கிறார். அவரது கவர்ச்சி நடனங்கள் மிகவும் பிரபலமானவை. பாலாவின் ‘சேது’ படத்தில் “கான கருங்குயிலே… கச்சேரிக்கு வர்றீயா… வர்றீயா…” என்ற பாடலுக்கு அவர் ஆடிய நடனம், அவரை இன்றைய தலைமுறை ரசிகர்களுக்கும் கொண்டுபோய் சேர்த்தது.

திரைப்படங்களில் மட்டும் அல்லாமல் ஏராளமான் டிவி சீரியல்களிலும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து, சீரியல் பிரியர்களின் உள்ளங்களிலும் இடம் பிடித்தவர் ஜோதிலட்சுமி என்பது குறிப்பிடத்தகுந்தது.