“திலீபன் மகேந்திரன் மீது தாக்குதல்: கருப்பு முருகானந்தத்தை உடனே கைது செய்க!”

சுவாதி கொலை வழக்கு விவகாரத்தில் தனிப்பட்ட முறையில் புலனாய்வு செய்து, அதிர்ச்சியூட்டும் தகவல்களை வெளியிட்டு வந்த சமூக செயல்பாட்டாளர் திலீபன் மகேந்திரன் மற்றும் அவரது வழக்கறிஞர் பொன்.தம்மபாலா ஆகியோர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தியது தொடர்பாக பிஜேபி – ஆர்எஸ்எஸ் கூலிப்படை தலைவன் கருப்பு என்ற முருகானந்தத்தை உடனே கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

இது தொடர்பாக கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) மக்கள் விடுதலை சார்பில் வெளியிடப்பட்டிருக்கும் சுவரொட்டியில், “தமிழக அரசே! காவல் துறையே! திலீபன் மகேந்திரன் மற்றும் வழக்கறிஞர் பொன்.தம்மபாலா மீது, திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வாயிலில், கொலைவெறி தாக்குதல் நடத்திய பிஜேபி – ஆர்எஸ்எஸ் கூலிப்படை தலைவன், காவல்துறையால் தேடப்படும் குற்றவாளி கருப்பு (எ) முருகானந்தம் மற்றும் அடியாட்களை உடனே கைது செய்” என வற்புறுத்தப்பட்டுள்ளது.

0a1h

சுவாதி கொலை தொடர்பாக திலீபன் மகேந்திரனுடன் இணைந்து புலனாய்வை மேற்கொண்டு வருபவரும், பிரான்ஸ் நாட்டில் வசிப்பவருமான தமிழச்சி, “பெரியார் மண்ணில் காவி தீவிரவாதமா?” என கொந்தளித்துள்ளார். மேலும், “பிஜேபி, ஆர்.எஸ்.எஸ் கூலிப்படைகளை துரத்தியடியுங்கள். காவல்துறையினரால் தேடப்படும் குற்றவாளி கருப்பு (எ) முருகானந்தம் தொடர்ந்து தீவிரவாத செயல்பாடுகளில் ஈடுபடுவதை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்கும்படி தமிழக அரசிடம் கோருங்கள்” என கோரிக்கை விடுத்துள்ளார்.

0a1k

Read previous post:
0a1f
திலீபன் மகேந்திரன் மீது கொலைவெறி தாக்குதல்: மருத்துவமனையில் அனுமதி!

சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சுவாதி என்ற இளம்பெண் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். ஒருதலை காதல் காரணமாக இக்கொலையை செய்ததாக நெல்லை மாவட்டம் மீனாட்சிபுரத்தை சேர்ந்த ராம்குமார்

Close