ஜேஎன்யூ மாணவர் சங்க தேர்தல் வெற்றி: இடதுசாரிகள் முன் உள்ள சவால்!

JNU மாணவர் சங்க தேர்தலில் இடதுசாரி அணி வெற்றி!

காவி பாசிச ABVP படுதோல்வி!

நாட்டின் மதிப்பு வாய்ந்த, சமீபத்தில் மோடி அரசாங்கத்தால், ABVP-RSS குண்டர்களால் வேட்டையாடப்பட்ட JNU- தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்க தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு விட்டன.

பல்வேறு துறைகளின் கவுன்சிலர்கள், பொறுப்பாளர்கள் முழுமையாக இடது அணியைச் சேர்ந்தவர்கள் வெற்றி பெற்றனர். ABVP எங்குமே வெற்றி பெற முடியவில்லை.

முக்கிய நிர்வாகிகளாக,

1) மொஹித் – தலைவர் AISA

2)அமல்- உதவி தலைவர் SFI

3)சத்ரூபா-பொதுசெயலாளர் SFI

4)தப்ரேஷ்- இணை செயலாளர் AISA

தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர்.

ABVP-RSS-BJP யின் கூட்டுத் தாக்குதலுக்கு எதிராக ஒட்டுமொத்த JNU மாணவர் சமூகமும் நடத்திய எழுச்சிகரமான போராட்டத்திற்கு உந்துசக்தியாக திகழ்ந்த கன்ணையா குமார், செஹ்லா ரசீத், ராம் நாகா, உமர் காலித், அனிர்பன் போன்ற பலரும் இந்த வெற்றிக்குப் பின்னால் நின்றுள்ளனர்.

அனைத்துக்கும் மேலாக…

AISA-SFI-AISF மாணவர் சங்கங்களின் ஒற்றுமை, கடின உழைப்பு-
JNU தேர்தலின் வெற்றிக்கு அடித்தளமாக திகழ்ந்துள்ளது.

நாடு முழுவதும் தொடரட்டும் இடதுசாரிகளின் ஒற்றுமை!

நாட்டைப் பிளவுப்படுத்தும் காவி பாசிஸ்டுகளின் சதிகளை ஒழித்துக் கட்டுவோம்!

Lal Salam! Jai bhim ! Inqulab jindabad!

– சந்திரமோகன்

                             # # #

இடதுசாரிகளின் கூட்டணி வெற்றி பெற்றிருக்கிறது. வலதுசாரிகள் தோல்வியுற்றிருக்கிறார்கள். அதிக வாக்குகள் பெற்ற தனித்தொரு இயக்கமாக அம்பேத்கரிய இயக்கம் (BAPSA) இருக்கிறது.

இடதுசாரிகள்-அம்பேத்கரியர்களின் ஒற்றுமை என்பது அசைக்க முடியாத ஒரு மாற்றைத் தரும் என்பது நிதர்சனம். ஏன் இவர்கள் தனித்தனியே போட்டியிட்டார்கள் என்று புரிந்துகொள்வதுதான் இந்தியாவில் சமூக மாற்றத்தை விரும்புகிற சிந்தனையாளர்கள் முன் உள்ள மிகப்பெரும் சவால்…

– யமுனா ராஜேந்திரன்