அடுத்த முதல்வரா?: அஜித் மீது செம காண்டில் இருக்கும் அ.தி.மு.க.வினர்!

நடிகர் அஜித்குமார் அரை மலையாளி. இதற்கும், “தமிழகத்தின் அடுத்த முதல்வர் அஜித்குமார் தான்” என கேரள தொலைக்காட்சிகள் முதன்முதலாக ஃபிளாஷ் நியூஸ் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியிருப்பதற்கும் தொடர்பே இல்லை என்று கூற முடியாது.

“சென்னை அப்போலோ மருத்துவமனையில் இருக்கும் முதல்வர் ஜெயலலிதா, தன்னை வந்து பார்க்குமாறு திடீரென்று நடிகர் அஜித்குமாரை அழைத்துள்ளார். அஜித்தும் ரகசியமாக அப்போலோ மருத்துவமனைக்குச் சென்று ஜெயலலிதாவை சந்தித்துள்ளார். அப்போது ஜெயலலிதா அஜித்திடம், ‘நான் உடல்நிலை சரியாகி வரும்வரை நீங்கள் தமிழக முதல்வராகி அனைத்துப் பொறுப்புகளையும் கவனித்துக்கொள்ளுங்கள். அப்படியே அ.தி.மு.க.வையும் பார்த்துக்கொள்ளுங்கள்’ என்று கேட்டுக்கொண்டுள்ளார். அஜித் மீது ஜெயலலிதா வைத்திருக்கும் அன்பும், நம்பிக்கையும் தான் இதற்கு காரணம். எனவே தமிழகத்தின் அடுத்த முதல்வர் அஜித் தான்.” இதுதான் கேரள தொலைக்காட்சிகள் வெளியிட்ட ஃபிளாஷ் நியூஸின் சாரம்.

தமிழினத்தின் மீது காலங்காலமாக தீரா வெறுப்பு கொண்டவர்கள் மலையாளிகள் என்பது வரலாறு. அப்படியிருக்கும்போது தமிழர்களையும், தமிழ் நிலத்தையும் அடக்கியாள மீண்டும் ஒரு மலையாளிக்கு வாய்ப்பு கிடைக்கும் என்றால் சும்மா இருப்பார்களா? கேரளா முழுக்க கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். அத்துடன், தமிழ்நாட்டிலிருக்கும் தங்கள் சொந்தபந்தங்களுக்கு போன் செய்து, “தமிழ்நாட்டின் அடுத்த முதல்வர் நம்ம அஜித்தாமே…? உண்மையா?” என்று ஆர்வத்துடன் விசாரித்து வருகிறார்கள்.

இது ஒருபுறமிருக்க, அஜித் ரசிகர்கள் வாட்ஸ்அப், ட்விட்டர், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் இந்த வதந்தியை வெளியிட்டு உலகெங்கும் உற்சாகமாக பரப்பி வருகிறார்கள். இதனால் சமூக வலைத்தளங்கள் முதல் ஊடகங்கள் வரை அனைத்தும் அல்லோலகல்லோலப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

இதனால் அ.தி.மு.க.வினர் பயங்கர கடுப்பில் இருக்கிறார்கள். ஜெயலலிதா உடனடியாக குணமடைந்து, முதல்வர் பணிகளை வழக்கம்போல் கவனிக்க வேண்டும் என்று ஏக்கத்துடன் பிரார்த்தனை செய்துவரும் அவர்கள், வேறொருவரை இடைக்கால முதல்வராகக் கூட ஏற்கத் தயாராக இல்லை. அப்படியிருக்கும்போது “அடுத்த முதல்வர் அஜித்” என்று கூறப்படுவதை எப்படி ஏற்றுக்கொள்வார்கள்?

மேலும், ஜெயலலிதாவுக்கு நெருக்கமான அதிகார மையத்தினர், “அஜித் அடுத்த முதல்வர்” என்ற காமெடியை ரசிக்கவில்லை. அவர்களது கோபமெல்லாம் அஜித் மீது தான். ‘இப்படி பரவி வரும் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அறிக்கை வெளியிடாமல், ரசித்து வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறாரே’ என்று அஜித் மீது அவர்கள் செம காண்டில் இருக்கிறார்கள்.

இதன் விளைவு, சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் தற்போது நடித்துவரும் ‘அஜித் 57’ படம் வெளியாகப்போகும் சமயத்தில் தெரிய வரும் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள். அப்போது எத்தனை திரையரங்குகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் வருமோ…! என்னென்ன சிக்கல்கள் ஏற்படுமோ…! பொறுத்திருந்து பார்ப்போம்!