ட்விட்டரில் ட்ரெண்டாகும் ‘திராவிடநாடு’ கோரிக்கை: “சசி தரூர் பயந்துட்டாப்ள!”

மத்திய வருணாசிரம அதர்ம அரசு மாட்டிறைச்சிக்கு தடை விதித்து பிறப்பித்துள்ள புதிய உத்தரவு, நாடு முழுவதும் பரவலாக எதிர்ப்பலைகளை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா ஆகிய தென்னிந்திய மாநிலங்களில் மத்திய அரசின் இந்த உத்தரவுக்கு கடும் கண்டனம் தெரிவித்து மிகப் பெரிய போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் ட்விட்டர் சமூக வலைதளத்தில் #திராவிடநாடு (#dravidanadu) என்ற ஹேஷ்டேக் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை முதலே ட்ரண்டாகி வருகிறது. தென்னிந்திய மக்களை ஒருங்கிணைத்து தனி நாடு என்ற கருத்துகளை முன்வைத்து பலரும் தங்களது கருத்துகளை இந்த ஹேஷ்டேக்கின் கீழ் பதிவு செய்து வருகின்றனர்.

0a1

இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், “அடைந்தால் திராவிடநாடு; இல்லையேல் சுடுகாடு” என 1940களிலும் 50களிலும் வீரமுழக்கம் செய்த தமிழகத்திலிருந்து தற்போது இந்த கோரிக்கை முதலில் எழுப்பப்படவில்லை. கேரளாவிலிருந்து இந்த தனிநாடு கோரிக்கை கிளம்பியிருப்பது தான் ஆச்சரியமான விஷயம். மலையாளிகள் தொடங்கியிருக்கும் இந்த தனி நாடு முழக்கத்திற்கு தமிழர்களும், கன்னடர்களும் பரவலாக ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.

அதேவேளையில், “மத்திய அரசு அறிவித்துள்ள புதிய திட்டத்தை சட்ட ரீதியாக எதிர்கொள்ள வேண்டுமே தவிர பிரிவினையைத் தூண்டும் வகையிலான ஹேஷ்டேக்குகளை ட்ரண்டாக்குவது சரியல்ல” என்ற வாதத்தை ‘அகில இந்திய மயக்கம்’ கொண்டுள்ள சிலர் முன்வைத்துள்ளனர்.

இந்நிலையில், கேரள மாநிலம் திருவனந்தபுரம் தொகுதி காங்கிரஸ் எம்.பி. சசிதரூர் தனது ட்விட்டர் பக்கத்தில் #திராவிடநாடு தொடர்பான ட்வீட் ஒன்றுக்கு பதிலளிக்கும்போது, “மோடி அரசின் மீதான விமர்சனங்கள் உண்மையென்றாலும். தனிநாடு போன்ற தேசவிரோதக் கொள்கைகளைத் தூண்ட வேண்டாம் என எனது சக தென்னக மக்களிடம் கேட்டுக் கொள்கிறேன். நாம் அனைவரும் இந்தியாவை மேம்படுத்துவோம்” என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

0a

உண்மையிலேயே தனி திராவிடநாடு கோரி போராட்டம் வெடித்துவிடுமோன்னு சசி தரூர் பயந்துட்டாப்ள…!