‘காலா’ படத்துக்காக ரஜினி, சமுத்திரக்கனி சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டன!

ரஜினிகாந்த் நடிக்கும் 164-வது படத்துக்கு ‘காலா’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு இன்று (மே 28ஆம் தேதி) மும்பையில் தொடங்கியது. இன்றைய படப்பிடிப்பில் ரஜினி – சமுத்திரக்கனி உள்ளிட்டோர் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டன.

பா.ரஞ்சித் இயக்கத்தில், தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் பிரைவேட் லிமிடெட் தயாரிக்கும் இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு, இன்று முதல் 40 நாட்கள் தொடர்ந்து மும்பையில் நடைபெறுகிறது.

லைகா புரடக்ஷன்ஸ் தயாரிப்பில், ஷங்கர் இயக்கத்தில் வளர்ந்து வரும் ‘2.0’ படத்தை அடுத்து ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படம் இது.

நடிகர் தனுஷின் தயாரிப்பு நிறுவனமான வுண்டர்பார் பிலிம்ஸ் பிரைவேட் லிமிடெட், ஐஸ்வர்யா தனுஷ் இயக்கிய ‘3’ படம் முதல், தனுஷ் இயக்கத்தில் அண்மையில் வெளியாகி வெற்றி பெற்ற ‘ப.பாண்டி’ வரை 11 படங்களைத் தயாரித்திருக்கிறது.

இவற்றில் ‘எதிர்நீச்சல்’, ‘வி.ஐ.பி’, ‘மாரி’, ‘தங்கமகன்’, ‘நானும் ரௌடிதான்’, ‘காக்கி சட்டை’,  ‘அம்மா கணக்கு’ ஆகிய கமர்ஷியல் படங்களும், தேசிய விருது பெற்ற ‘காக்கா முட்டை’, ‘விசாரணை’ ஆகிய படங்களும் அடங்கும். ரஜினிகாந்த் நடிக்கும் ‘காலா’ திரைப்படம் தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் தயாரிக்கும் 12-வது படம்.

‘அட்டகத்தி’, ‘மெட்ராஸ்’, ‘கபாலி’ ஆகிய வெற்றிப்படங்களை அடுத்து பா.இரஞ்சித் இயக்கும் 4-வது படம் ‘காலா’. ரஜினிகாந்த் நடிக்கும் படத்தை அடுத்தடுத்து இயக்கும் வாய்ப்பைப் பெற்ற ஒரே இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் தான். அவருக்குப் பின் இந்த பெருமையைப் பெற்றுள்ள இயக்குநர் பா.இரஞ்சித் மட்டுமே.

‘காலா’ படத்தில் கதாநாயகியாக பாலிவுட் நடிகை ஹுமா குரேஷி நடிக்கிறார். இவருடன் ஈஸ்வரிராவ், நானா படேகர், அஞ்சலி பாட்டீல், சமுத்திரக்கனி, சம்பத், ரவி கேளா, சாயாஜி ஷிண்டே, பங்கஜ் த்ரிபாதி, மிகி மகிஜா, மேஜர் பிக்ரம்ஜித், அருள்தாஸ், அரவிந்த் ஆகாஷ், ‘வத்திகுச்சி’ திலீபன், ரமேஷ் திலக், மணிகண்டன், அருந்ததி, சாக்ஷி அகர்வால், நிதிஷ், வேலு, ஜெயபெருமாள், கருப்பு நம்பியார், யதின் கார்யகர், ராஜ் மதன், சுகன்யா உட்பட மிகப் பெரிய நட்சத்திரப் பட்டாளமே இந்த ரஜினி படத்தில் நடிக்கிறது.

இப்படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். இயக்குநர் பா.இரஞ்சித் – சந்தோஷ் நாராயணன் கூட்டணி இணையும் நான்காவது படம் இது. கபிலன், உமாதேவி பாடல்கள் எழுதுகின்றனர். ‘மெட்ராஸ்’, ‘கபாலி’ படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த முரளி ஜி, இப்படத்துக்கு ஒளிப்பதிவு செய்கிறார்.

கலை இயக்கம் – டி.ராமலிங்கம்

படத்தொகுப்பு – ஸ்ரீகர் பிரசாத்

சவுண்ட் டிசைனர் – ஆண்டனி பி ஜெயரூபன்

கிரியேட்டிவ் டிசைனர் – வின்சி ராஜ்

சண்டைப்பயிற்சி – திலீப் சுப்பராயன்

நடனம் – சாண்டி

ஆடை வடிவமைப்பு – அனு வர்தன், சுபிகா

காஸ்ட்யூம்ஸ் – செல்வம்

ஒப்பனை – பானு பாஷ்யம், ராஜா

ஸ்டில்ஸ் – ஆர்.எஸ்.ராஜா

நிர்வாகத் தயாரிப்பு – எஸ்.வினோத்குமார்

தயாரிப்பு மேற்பார்வை – எஸ்.பி.சொக்கலிங்கம், ஆர். ராகேஷ்

எழுத்து, இயக்கம் – பா.இரஞ்சித்

தயாரிப்பு – வுண்டர்பார் பிலிம்ஸ் பிரைவேட் லிமிடெட்

ஊடகத் தொடர்பு – ரியாஸ் கே.அகமது

 

Read previous post:
g5
நட்பையும், வாழ்க்கை போராட்டத் தையும் சொல்லும் ‘கில்லி பம்பரம் கோலி’! 

ஸ்ரீ சாய் ஃபிலிம் சர்க்யூட் சார்பாக டி.மனோஹரன் கதை திரைக்கதை வசனம் எழுதி தயாரித்து இயக்கும் படம் ‘கில்லி பம்பரம் கோலி’. நம் மண்ணுக்கே உரிய விளையாட்டுகளான

Close