‘பொட்டு’ படப்பிடிப்புக்காக 2ஆயிரம் அடி உயர மலையில பிரமாண்டமான அரங்குகள்!

ஷாலோம் ஸ்டுடியோஸ் பட நிறுவனம் சார்பில் ஜான்மேக்ஸ், ஜோன்ஸ் இருவரும் இணைந்து தயாரிக்கும் படம் ‘பொட்டு’. இந்த படத்தில் பரத் நாயகனாக நடிக்கிறார்.  நாயகிகளாக நமீதா, இனியா, சிருஷ்டி டாங்கே ஆகியோர் நடிக்கிறார்கள். இவர்களுடன் தம்பி ராமய்யா, பரணி, நான்கடவுள் ராஜேந்திரன், ஊர்வசி, நிகேஷ்ராம், ஷாயாஜிஷிண்டே, மன்சூரலிகான், ஆர்யன், சாமிநாதன், பாவா லட்சுமணன் ஆகியோர் நடிக்கிறார்கள்.

கதை, திரைக்கதை அமைத்து இயக்குகிறார் வடிவுடையான். படம் பற்றி இயக்குனர் வடிவுடையான் கூறுகையில், “பரபரப்பான பேய் படமாக இது இருக்கும். மருத்துவ கல்லூரி பின்னணியில் இந்த படம் இருக்கும்.

“சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு கொல்லிமலையில் நடைபெற்றது. ஆதிவாசிகள், பழங்குடியினர் பகுதிகளில் நடக்கும் காட்சிகளுக்காக கடல் மட்டத்திலிருந்து 2ஆயிரம் அடி உயர மலைப்பகுதியில் பிரமாண்டமான அரங்குகள் அமைக்கப்பட்டு, பரத், நமீதா, இனியா, நிகேஷ்ராம், ஆர்யன் சம்பந்தப்பட்ட காட்சிகள் பத்து நாட்கள் படமாக்கப்பட்டன.

“நாங்கள் படப்பிடிப்பு நடத்திய இடம் ரொம்பவும் மேடானது வண்டி எதுவும் போகாது. 4 கிலோமீட்டர் எல்லோரும், எல்லா சாதனங்களையும் நடந்தே எடுத்தச் சென்று படமாக்கினோம். ‘சவுகார்பேட்டை’ படத்தில் இருந்த குறைகள் நிச்சயமாக ‘பொட்டு’ படத்தில் இருக்காது” என்றார்.

வசனம்   –  செந்தில்

 ஒளிப்பதிவு   –   இனியன் ஹரீஷ்

இசை   –  அம்ரீஷ்

பாடல்கள்   –  விவேகா, யுகபாரதி,

ஸ்டன்ட்   –  சூப்பர் சுப்பராயன்

எடிட்டிங்   –  எலீசா

கலை  –  நித்யானந்தம்

நடனம்    –  ராபர்ட்

தயாரிப்பு மேற்பார்வை  –  ஜி.சங்கர்

ஊடகத்தொடர்பு – மௌனம் ரவி

Read previous post:
0a5a
“பசு எனக்கு மாதா அல்ல; மாடு மட்டும் தான்!”

“பசு மாடு மாதா மாதிரி. நமக்கு, குழந்தைகளுக்கு பால் கொடுக்கிறது. வயதான பசு மாட்டை கசாப்புக் கடைக்கு அனுப்புவது போல், தாய் வயதானால் கசாப்புக் கடைக்கு அனுப்புவீர்களா?”

Close