மீண்டும் ரஜினிகாந்த் – பா.ரஞ்சித் கூட்டணி: தனுஷ் தயாரிப்பதாக அறிவிப்பு!

பா.ரஞ்சித் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி அமோக வரவேற்பை பெற்றுள்ள படம் ‘கபாலி’. இதனை அடுத்து ஷங்கர் இயக்கத்தில் ரஜினி ‘2.0’ படத்தில் நடிக்கிறார்.

‘2.0’க்கு பிறகு ரஜினி நடிக்கப்போகும் படம் எது என்ற கேள்வி ஒரு புறமும், ‘கபாலி’யை அடுத்து பா.ரஞ்சித் எந்த நட்சத்திர நடிகரை இயக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு மறுபுறமும் திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

இந்நிலையில், “2.0’ படத்தையடுத்து ரஜினிகாந்த் நடிக்கும் படத்தை பா.ரஞ்சித் இயக்க இருப்பதாகவும், அப்படத்தை தனுஷின் சொந்த பட நிறுவனமான வுண்டர்பார் பிலிம்ஸ் தயாரிக்க இருப்பதாகவும், தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் (https://twitter.com/dhanushkraja/status/770306581581869056/video/1) இன்று அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.