‘இரு கில்லாடிகள்’  படத்தை ரஜினிகாந்த் பார்ப்பாரா?: ஜாக்கிசான் ஆவல்

ஜாக்கிசான் நடித்து வெளியான ஸ்கிப் ட்ரேஸ் (SKIP TRACE) என்ற படம் சீனாவில் மட்டுமே வெளியாகி முதல் நாளில் 420 கோடி ரூபாய் வசூல் சாதனை செய்து, ஜாக்கிசானின் மனதில் நம்பிக்கையை விதைத்தது. ரிலீஸான ஒரே வாரத்தில் 1000 கோடியை வசூல் செய்தது. அதுவும் சீனாவில் மட்டுமே.

பக்கா கமர்ஷியல் படமாக உருவாகி உள்ள SKIP TRACE படம், தமிழில் ‘இரு கில்லாடிகள்’ என்ற பெயரில் வெளியாகிறது. நூற்றுக்கும் மேற்ப்பட்ட ஆங்கிலப் படங்களை தமிழில் மொழிமாற்றம் செய்து விநியோகம் செய்திருக்கும் சன்மூன் பிக்சர்ஸ் பட நிறுவனம் சார்பாக விஸ்வாஸ் சுந்தர் ‘இரு கில்லாடிகள்’ படத்தை செப்டம்பர் 2ஆம் தேதி வெளியிடுகிறார்.

ரஜினிகாந்த் நடித்த ‘கபாலி’ படத்தை சீனாவில் வெளியான அன்றே திரையரங்கிற்கு சென்று  பார்த்து பாராட்டினார் ஜாக்கிசான். அவர் நடித்த SKIP TRACE படமும் அன்றுதான் ரிலீஸ் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது.

வருகிற செப்டம்பர்  2 அன்று வெளியாகும் இந்த ‘இரு கில்லாடிகள்’ படத்தை ரஜினிகாந்த் பார்ப்பாரா? என்று ஜாக்கிசான் ஆவலுடன் இருப்பதாக அவரது தரப்பு கூறுகிறது.

Read previous post:
0a1b
Denied hospital admission and stretcher, Kanpur man’s son dies on his shoulder

A father lost his ailing son on his shoulder after he was allegedly turned down at the government-run Lala Lajpat

Close