கதாநாயகிகள் குடும்பத்திலிருந்து ஒரு புதிய கதாநாயகி – லவ்லின்!

நடிகை சரிதாவும், அவரது சகோதரியும் நடிகையுமான விஜி சந்திரசேகரும் அழகிய தோற்றத்திற்கும், எதார்த்த நடிப்பாற்றலுக்கும் எடுத்துக்காட்டாய் விளங்கியவர்கள். பல படங்களில் நடித்து அனைவரின் அன்பையும், ஆதரவையும் பெற்ற இவர்களின் குடும்பத்திலிருந்து மேலும் ஒரு புதிய இளமை ததும்பும் கதாநாயகி அறிமுகமாக உள்ளார்.

சந்திரசேகர் – விஜி சந்திரசேகர் தம்பதியின் மகள் தான் அவர். பெயர் – லவ்லின். பெயரிடப்படாத ஒரு புதிய படத்தில் கதாநாயகியாக நடிக்க உள்ளார்.

0a5

சிறுவயது முதலே நடிப்பின் மேல் உள்ள ஈர்ப்பால் கதாநாயகியாக உருவாக வேண்டும் என்ற ஆசை மேலோங்க, குடும்பத்தினரின் அரவணைப்போடு கலையுலகத்திற்கு அறிமுகமாகிறார் லவ்லின். இவர் மும்பையிலுள்ள அனுபம் கேர் சினிமா பள்ளியில் நடிப்பு கலையை முறையாக பயின்றுள்ளார்.

தற்போது துபாயில் மனோதத்துவ பட்டப் படிப்பின் இறுதி ஆண்டை தொடரும் லவ்லினின் புதிய படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் மாதம் தொடங்க உள்ளது. இப்படத்தின் மற்ற நடிகர் – நடிகையர், தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என தயாரிப்பு தரப்பு கூறியுள்ளது.