நீண்ட இடைவெளிக்குப்பின் விஜய் படத்துக்கு இசை அமைக்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான்?

ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் விஜய் நடிப்பில் வெளியான படம் ‘அழகிய தமிழ் மகன்’. அதற்குப் பிறகு வெளியான விஜய் படம் எதற்கும் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கவில்லை.

இந்நிலையில், ‘பைரவா’ படத்தைத் தொடர்ந்து அட்லீ இயக்கத்தில் உருவாகும் படத்துக்கு தேதிகள் ஒதுக்கி இருக்கிறார் விஜய். இப்படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க இருக்கிறது. இதற்கான முதற்கட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

இப்படத்திற்கு இசையமைக்க ஏ.ஆர்.ரஹ்மானிடம் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறது படக்குழு. இது குறித்து “ஏ.ஆர்.ரஹ்மானுடன் முதற்கட்ட பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறோம். இன்னும் ஓரிரு வாரங்களில் முடிவு என்ன என்பது தெரிந்துவிடும்” என்கிறது படக்குழு.

இப்படத்தின் படப்பிடிப்பை அடுத்த ஆண்டு துவக்கத்தில் ஆரம்பிக்க திட்டமிட்டு இருக்கிறார்கள்.