‘அஜித் 57’ படத்தின் படப்பிடிப்புக்கு சென்னை போலீஸ் அனுமதி மறுப்பு!

சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித், காஜல் அகர்வால் நடித்துவரும் படத்துக்கு இன்னும் பெயர் அறிவிக்கப்படவில்லை. இப்படத்தை ‘அஜித் 57’ என்று படக்குழு அழைத்து வருகிறது.

இப்படத்தின் படப்பிடிப்புக்காக சென்னை அப்போலோ மருத்துவமனை அருகே உள்ள அமீர் மகால் என்ற படப்பிடிப்புத் தளத்தை 2 நாட்களுக்கு வாடகைக்கு எடுத்திருந்தார்கள். இதில் அஜித் இல்லாமல், காஜல் அகர்வால் சம்பந்தப்பட்ட காட்சிகளை மட்டும் படமாக்க திட்டமிட்டிருந்தார்கள்.

ஆனால், முதல்வர் ஜெயலலலிதா அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இப்படத்தின் படப்பிடிப்பை அமீர் மகாலில் நடத்த சென்னை போலீஸ் அனுமதி மறுத்துவிட்டது

இதனால் ஹைதராபாத்தில் அக்காட்சிகளை படமாக்கி இருக்கிறது படக்குழு. அஜித் சம்பந்தப்பட்ட காட்சிகளையும் அக்டோபர் 10ஆம் தேதி முதல் ஹைதராபாத்திலேயே படமாக்க இருக்கிறார்கள்.

Read previous post:
0a1e
ரூ.100 கோடி வசூலித்த ஹிந்திப்படம் தமிழில் வெளியாகிறது: நாயகி சன்னி லியோன்!

இந்தியத் திரையுலகில் முன்னணி தயாரிப்பு நிறுவனமாக கடந்த 17 வருடங்களாக இயங்கிவரும் ஸ்ரீபாலாஜி மோஷன் பிக்சர்ஸ் படநிறுவனம், சுமார் 100 கோடி ரூபாய்க்கு  மேல் வசூலை வாரிக் குவித்த ‘ராகினி எம்.எம்.எஸ்

Close