திரைத்துறைக்கு திரும்புகிறார் பிரபல எழுத்தாளர் ராஜேஷ்குமார்!

கிரைம் திரில்லர் கதைகள் எழுதி பிரபலமானவர் எழுத்தாளர் ராஜேஷ்குமார். இவரது ஒரு கதையைக்கூட படிக்காத ஒரு தமிழ் வாசகர்கூட இருக்க முடியாது. கசப்பான அனுபவங்கள் காரணமாக வெறுப்புற்று சினிமாத்துறையிலிருந்து விலகியிருந்த இவர், இப்போது மீண்டும் திரைத்துறைக்கு திரும்ப இருக்கிறார்.

 இது குறித்து பிரபல எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர் கூறியிருப்பது:-

“ராஜேஷ்குமாருக்கும் எனக்கும் இனிமையான நல்ல நட்பு உண்டு. சினிமாவில் போல ஒரே துறையில் இயங்குவதால் ஊசிமுனை அளவிற்குக்கூட பொறாமையெல்லாம் கிடையாது. ஒவ்வொரு சந்திப்பிலும் ஆத்மார்த்தமாகப் பேசிக் கொள்வோம். குடும்ப விஷயங்கள், சிந்தனைகள், திட்டங்கள், ஏமாற்றப்பட்டது எப்படி என்று சகலமும்.

“சமீபத்தில் பொள்ளாச்சியில் நண்பர் சுரேஷின்(சுபா) மகன் திருமணத்தின்போது சந்தித்தபோதும் பேசிப் பேசி பிரிய மனமில்லாமல்தான் பிரிந்தோம். அவருடைய ரசிகர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி. இதுவரை சற்று வெறுப்புடன் விலகல் மனதுடன் இருந்த அவர் இனி சினிமாவில் ஈடுபாட்டுடன் இயங்க இருக்கிறார்.”