சக்தி வாசு ஹேப்பி அண்ணாச்சி…!
![](http://www.heronewsonline.com/wp-content/uploads/2016/05/0a1f-5.jpg)
‘சின்னத்தம்பி’, ‘ரிக்ஷா மாமா’, ‘செந்தமிழ் பாட்டு’ உள்ளிட்ட தமிழ்ப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்து, பின்னர் தனது தந்தை பி.வாசு இயக்கத்தில் ‘தொட்டால் பூ மலரும்’ படம் மூலமாக கதாநாயகனாக அறிமுகமாகி அனைவரின் பாராட்டையும் பெற்றவர் சக்தி வாசு.
தனது ஜனரஞ்சகமான நடிப்பாலும், நடனம் – சண்டைப் பயிற்சி என அனைத்துத் துறைகளிலும் தனித்துவமாக விளங்கியதாலும் சக்தி வாசு தனக்கென்று ரசிகர்களின் மனதில் இடத்தை தக்கவைத்துக் கொண்டார்.
சமீபத்தில் பி.வாசு இயக்கத்தில் சிவராஜ்குமாருடன் இவர் இணைந்து நடித்த ‘சிவலிங்கா’ திரைப்படம் பல திரையரங்குகளில் 100 நாட்களைத் தாண்டி வெற்றிகரமாக ஓடுகிறது. தமிழை அடுத்து கன்னடத்திலும் தனது தனிதிறமையால் ஒரு கதாநாயகனாக உருவானதை நினைத்து சந்தோஷப் பூரிப்பில் இருக்கிறார் சக்தி வாசு.
‘சிவலிங்கா’வின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து அப்படத்தை விரைவில் தமிழில் அனைத்து ரசிகர்களும் ரசிப்பதற்கு ஏற்றவாறு ஜனரஞ்சகமான முறையில் எடுக்கவுள்ளனர். ‘சிவலிங்கா’வின் தமிழ் பதிப்பில் நடிகர் ராகவா லாரன்ஸும், சக்தி வாசுவும் இணைந்து நடிக்கிறார்கள். மற்ற நடிகர் – நடிகையர் தேர்வு நடைபெற்று வருகிறது.
தற்போது ‘7 நாட்கள்’, ‘துரியோதனா’ என 2 தமிழ் படங்களிலும், பெயரிடப்படாத ஒரு மலையாளப் படத்திலும் நடித்து வருகிறார் சக்தி வாசு.