விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படம் – ‘தானா சேர்ந்த கூட்டம்’!

நடிகர் சூர்யா தற்போது ஹரி இயக்கத்தில் ‘சிங்கம்’ படத்தின் மூன்றாம் பாகத்தில் நடித்து வருகிறார். ‘எஸ்-3’ எனப்படும் இப்படம் வருகிற டிசம்பர் மாதம் 16-ம் தேதி வெளியாக உள்ளது.

அடுத்து, தனுஷ் தயாரித்த  ‘நானும் ரவுடி தான்’ வெற்றிப்படத்தை இயக்கிய விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா நடிக்கிறார். ஞானவேல்ராஜாவின் ‘ஸ்டூடியோ கிரீன்’ நிறுவனமும், சூர்யாவின ‘2டி என்டர்டெயின்மென்ட்’ நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் இப்படத்துக்கு, ‘தானா சேர்ந்த கூட்டம்’ என பெயர் சூட்டப்பட்டிருக்கிறது.

‘பாட்ஷா’, ‘படையப்பா’ போன்ற படங்களில் ரஜினிகாந்த் பேசிய பிரபலமான வசனம் தான் “தானா சேர்ந்த கூட்டம்” என்பது நினைவுகூரத்தக்கது.

இப்படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்கும் கதாநாயகி யார் என்பது முடிவு செய்யப்படவில்லை. ஆனால் அது நயன்தாரா இல்லை என்பது மட்டும் முடிவு செய்யப்பட்டுவிட்டது.

(குறிப்பு: மேலே உள்ள ‘தானா சேர்ந்த கூட்டம்’ டிசைன், சூர்யாவின் ரசிகர் ஒருவரால் வடிவமைக்கப்பட்டது.)