விஜய் சேதுபதி – அஞ்சலி நடிக்கும் புதிய படம்: எஸ்.யு.அருண்குமார் இயக்குகிறார்!

பாகுபலி 2 படத்தை வெளியிட்ட எஸ்.என்.ராஜராஜனின் கே புரொடக்‌ஷ்ன்ஸ் மற்றும்  இசையமைப்பாளர் யுவன் சங்கர்ராஜாவின் YSR பிலிம்ஸ்( பி) லிட்  ஆகிய பட நிறுவனங்கள் இணைந்து தற்போது ‘பியார் பிரேமா காதல்’ படத்தை தயாரித்து வருகின்றன. இதை தொடர்ந்து, விஜய்சேதுபதி, அஞ்சலி நடிக்க  ‘பண்ணையாரும் பத்மினியும்’, ‘சேதுபதி’ ஆகிய படங்களை  இயக்கிய எஸ்.யு.அருண்குமார் இயக்கத்தில், விஜய் சேதுபதி, அஞ்சலி நடிக்கும்  புதிய படத்தை இந்நிறுவனங்கள் தயாரிக்கின்றன.

இந்த படத்தில் மாறுபட்ட வில்லனாக லிங்கா நடிக்கிறார். ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் விவேக் பிரசன்னா நடிக்கிறார்.  மற்ற நட்சத்திரங்கள் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.

இயக்குனர் எஸ்.யு.அருண்குமார், நாயகன் விஜய் சேதுபதி இருவரும் இணையும் மூன்றாவது படம் இது என்பது குறிபிடத்தக்கது. இன்னும் பெயரிடப்படாத இந்த படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

ஒளிப்பதிவு  –  விஜய் கார்த்திக் கண்ணன்

எடிட்டிங்  – ஸ்ரீகர் பிரசாத்

தயாரிப்பு மேற்பார்வை  – கே.சிவசங்கர்

கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் –  எஸ்.யு.அருண்குமார்.

தயாரிப்பு  – எஸ்.என்.ராஜராஜன், யுவன் சங்கர்ராஜா

இந்த படத்தின் துவக்க விழா சென்னையில் நடைபெற்றது. படப்பிடிப்பு தென்காசி மற்றும் மலேசியாவில் நடைபெற உள்ளது.  இது ஒரு அதிரடி ஆக்ஷன் படமாக உருவாக உள்ளது.

 

Read previous post:
0a1c
மெர்க்குரி – விமர்சனம்

ஸ்டோரி லைன் என்று பார்த்தால், வழக்கமான பேய் படத்துக்கான ஸ்டோரி லைன் தான். தன் மரணத்துக்கு காரணமானவர்களை, மரணித்த நபரின் ஆவி கொடூரமாக பழி வாங்குவது தான்

Close