“ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு தமிழக அரசிடம் அனுமதி பெறவில்லை!”

“ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எண்ணெய் நிறுவனங்கள் தமிழக அரசிடம் அனுமதி பெறவில்லை” என தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடத்தில் உள்ள சிப்காட்டில் 7782 சதுர அடியில் ரூ. 1கோடியே 90 லட்சத்து 30ஆயிரம் செலவில் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் அலுவலகம் திறப்பு விழா இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்றது.

நிகழ்ச்சி நிறைவில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கருப்பணன், “ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த பல இடங்களில் எண்ணெய் நிறுவனங்களின் சார்பில் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டது. இந்த கிணற்றை அமைக்க தமிழக சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் அனுமதி பெறவில்லை. எண்ணெய் எடுக்க எங்களிடம் அனுமதி பெற வரும்போது அனுமதிப்பதா, வேண்டாமா என்பது அரசின் கொள்கை முடிவு” என்றார்.