மோடி + ஓ.பி.எஸ் கூட்டணி உதவியுடன் காவி கும்பல் தமிழகத்தில் எந்த எல்லைக்கும் செல்லும்!

“மெரினா போராட்டத்தில் பின்லேடனின் படத்துடன் தீவிரவாதிகள் கலந்துகொண்டதாக” இங்குள்ள புகைப்படத்தை தான் முதலமைச்சர் பன்னீர் சட்டமன்றத்தில் காட்டியுள்ளார்.

0a1

0a1cஅந்த தீவிரவாதியின் பைக் எண் TN 05 BC 3957. பெயர் S.ராஜி என்கிற கோட்சேவின் வாரிசு. இந்து முன்னணி என்கிற காவிப் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவன். மெரினாவில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மாணவர்கள், இளைஞர்கள் கூடியிருந்த கூட்டத்தில் மதக்கலவரத்தை உண்டாக்கும் நோக்கத்துடன் பின்லேடனின் படத்துடன் முஸ்லீம் போல வந்திருக்கிறான்;

இவன் மட்டுமின்றி இவனைப் போல பலரையும் ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க மதவெறியர்கள் கூட்டத்திற்குள் அனுப்பியுள்ளனர் என்பதையும் தமிழக போலீஸ் உளவுத்துறை சில மணி நேரங்களிலேயே துப்பறிந்து அம்பலப்படுத்தி இருக்கிறது.

ஆனாலும்,  தமிழக முதல்வர் மிகவும் கேவலமாக, இந்தப் படத்தை சட்டமன்றத்தில் எடுத்துக் காட்டியுள்ளார். தான் வகிக்கும் பதவியை அசிங்கப்படுத்தியதுடன், மத்தியிலுள்ள பாஜக – மோடி அரசின் பொம்மை எனவும் நிரூபித்துள்ளார்.

இனிமேல் தமிழகத்தில் காவிக்கும்பல், பிரதமர் மோடி + ஓ.பி.எஸ் கூட்டணி உதவியுடன் எந்த எல்லைக்கும் செல்லும்!

எச்சரிக்கை ! எச்சரிக்கை! (Shared from CHANDRA MOHAN, State Committee Member, CPIML – Libration)