பெண் பயணிகளின் பாதுகாப்புக்கான அம்சங்களுடன் புதிய பேருந்து: பர்வின் டிராவல்ஸ் அறிமுகம்!

பர்வின் டிராவல்ஸ் தென்னிந்தியாவில் மக்களால் விரும்பப்படுகிற ஒரு டிராவல்ஸ் நிறுவனம். இப்பொழுது ஒருபடி மேலும் முன்னேறி, பெண்களின் பாதுகாப்பு மற்றும் சலுகைக்கு ஏற்றவாறு புதிய வாகனத்தை பயன்பாட்டிற்கு அறிமுகப்படுத்தி இருக்கிறது.

பர்வின் டிராவல்ஸ் நிறுவனம் ரெட் பஸ் நிறுவனத்துடன் இணைந்து இத்திட்டத்தை பயன்பாட்டிற்கு அளிக்க இருக்கிறது. இந்நிறுவனத்தின் பல முயற்சிகளுக்கு ரெட் பஸ் நிறுவனம் ஆதரவளித்து வருகிறது. அந்த வகையில் பர்வின் டிராவல்ஸ் நிறுவனம், பெண்களுக்கான இந்த வாகனத்தை ரெட் பஸ் நிறுவனத்துடன் இணைந்து மகிழ்ச்சிகரமாக பயணத்தை தொடங்க இருக்கிறது.

பெண்களின் தேவையை புரிந்துகொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள இந்த வாகனம், பண்டிகை மற்றும் திருவிழா காலங்களில் பெண்கள் சுலபமாக பயன்படுத்துவதற்கு உதவியாக இருக்கும். இதை முதலில் மதுரை மாநகரில் தொடங்கி, பின்னர் அனைத்து முக்கிய வழித்தடங்களுக்கும் இயக்க உள்ளது பர்வின் டிராவல்ஸ் நிறுவனம்.

குறிக்கோள்:

  • மகளிருகான சிறப்பு பேருந்து
  • பெண்களுக்கு மரியாதை அளிப்பதன் முக்கியத்துவம் கருதி இந்த சிறப்பு பேருந்து இயக்கப்படுகிறது.
  • பெண்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்ட வாகனம்.

விரிவான ஆராய்ச்சிக்குப் பிறகு, பர்வின் டிராவல்ஸ் நிறுவனம் பெண்களுக்கு பாதுகாப்பான பயணத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு இத்திட்டத்தை வகுத்துள்ளது.

சிறப்பம்சங்கள்:

  • சரிபார்க்கப்பட்ட பயிற்சி குழுவினர்.
  • பயணம் தொடங்கும்முன் ஓட்டுனர் பற்றிய விவரங்கள் பயணிகளுக்கு வழங்கப்படும்.
  • அனைத்து வாகனங்களிலும் ஜிபிஎஸ் கண்காணிப்பு
  • அனைத்து வாகனங்களிலும் சிசிடிவி கண்காணிப்பு.
  • பெண்களுக்கான இருக்கையில் முன்னுரிமை .
  • இந்த சிறப்பு வாகனம் பற்றிய தகவல்களையும், விழிப்புணர்வு அம்சங்களையும் பர்வின் டிராவல்ஸ் நிறுவனத்தின் இணயதளத்தில் காணலாம்.

0a1h

Read previous post:
0a1g
EVM debate: I am an IIT engineer, know 10 ways to rig the machines, says Arvind Kejriwal

Aam Aadmi Party convenor Arvind Kejriwal on Friday once again reiterated his gripe that the Electronic Voting Machines used in

Close